விளையாட்டு அமைச்சருக்கு லஞ்சம்.. முன்னாள் SLC ஆய்வாளர் சனத் ஜெயசுந்தராவுக்கு 7 ஆண்டுகள் தடை!
இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் செயல்திறன் ஆய்வாளர் சனத் ஜெயசுந்தராவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட்களிலிருந்து ஏழு ஆண்டுகள் தடை விதிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில், முன்னாள் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தேசிய அணியில் சில வீரர்களை சேர்க்க லஞ்சம் வழங்கப்பட்டதாகவும், அவர் உடனடியாக ஐ.சி.சி ஊழல் தடுப்பு பிரிவுக்கு புகார் அளித்ததாகவும் தெரிவித்தார்.
ஹரின் பெர்னாண்டோ குற்றச்சாட்டைத் தொடர்ந்து சனத் ஜெயசுந்தரா தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த ஐசிசி ஊழல் தடுப்பு தீர்ப்பாயம், சனத் ஜெயசுந்தரா ஐசிசி ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக அவரை குற்றவாளி என்று கண்டறிந்துள்ளது.
இதனையடுத்து, சனத் ஜெயசுந்தராவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட்களிலிருந்து ஏழு ஆண்டுகள் தடை விதிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.
இந்த 7 தடை சனத் ஜெயசுந்தார இடைநீக்கம் செய்யப்பட்ட 11 மே 2019 அன்று முதல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என ஐசிசி குறிப்பிட்டுள்ளது.