3 புதிய விதிகள் அமுல்! இலங்கை வீரர்கள் ஓய்வு தொடர்பில் SLC முக்கிய அறிவிப்பு
Retirement
SLC
3NewRules
NoticePeriod
SrilankaPlayers
7 மாதங்கள் முன்
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் (SLC) நிர்வாகக் குழு, இலங்கை கிரிக்கெட் அணியின் ஓய்வு பெற்ற அல்லது ஓய்வு பெற விரும்பும் வீரர்கள் தொடர்பில் மூன்று முக்கிய விதிகளை அமுல்படுத்தியுள்ளது.
- அதன்படி, ஓய்வு பெறும் நோக்கில் உள்ள தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் மூன்று மாதத்திற்கு முன்னர் அது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் வாரித்திடம் அறிவிக்க வேண்டும்.
- ஓய்வு பெற்ற வீரர்கள் வெளிநாட்டு (Franchise) தொடர் ஒன்றில் விளையாட வேண்டும் எனில், அவர்களுக்கான இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி (NOC) குறித்த வீரர்கள் ஓய்வு பெற்று ஆறு மாதங்கள் பூர்த்தியடைந்த பின்னரே வழங்கப்படும்.
- ஓய்வு பெற்ற வீரர்கள் LPL போன்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கான அனுமதி, அவர்களுக்கு குறித்த உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் ஒழுங்கு செய்யப்படும் திகதிக்கு முன்னர் நடைபெறுகின்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் 80% போட்டிகளில் விளையாடினால் மாத்திரமே வழங்கப்படும்.
இந்தி 3 புதிய விதிகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US