இலங்கை வீரருக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்து ஓரண்டு தடை! வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் வீரர் பானுகா ராஜபக்ஷவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் இலங்கை கிரிக்கெட் வாரியம், விசாரணையில் பானுாக ராஜபக்ஷ சமூக மற்றும் பிற ஊடக நேர்காணல்களில் பங்கேற்றதின் மூலம் ஒப்பந்தத்தை மீறியுள்ளார் என கண்டறியப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் வீரர் பானுகா ராஜபக்ஷவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு இந்த தடை விதிக்க இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது மற்றும் 5,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எதிர்கால சுற்றுப்பயணங்களை மையமாகக் கொண்ட ஒரு பயோ-பப்பில் கீழ் தற்போது கொழும்பில் பயிற்சியளித்து வரும் 13 பேர் கொண்ட இலங்கை அணியில் ராஜபக்ஷாவை சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ராஜபக்ஷ தேவையான உடற்பயிற்சி நிலைகளை தேர்ச்சி அடைந்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது, இது தேசிய தேர்வுகளுக்கான முன்நிபந்தனைகளில் ஒன்றாகும்.
Sri Lanka Crickter @BhanukaRajapak3 Will Join Bio Bubble tomorrow.
— DANUSHKA ARAVINDA (@DanuskaAravinda) July 5, 2021
He also Fine US $ 5,000 & 1 year ban Suspended for 2 year after SLC the inquiry. #INDvSL pic.twitter.com/VOd6U5Rmq3
அவர் நாளை பயோ-பப்பில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.