மதியம் குட்டித்தூக்கம் போடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
மதியம் சாப்பிட்டவுடன் கண்கள் கட்டி லேசாக தூக்கம் வரும், இதை பார்க்கும் அருகிலிருப்பவர்கள் என்ன உண்ட மயக்கமா என கிண்டலாக கேட்பார்கள்.
குட்டித்தூக்கத்தை எப்படி பிரிக்கலாம்?
முதல் வகையில் திட்டமிட்ட நேரத்தில் தூங்குவது, இரண்டாம் வகை, நம்மையும் அறியாமல் அல்லது வேலைப் பளு காரணமாக செய்யும் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கும் போது நம்மையும் அறியாமல் தூங்குவது. மூன்றாம் வகை பழக்கப்பட்ட குட்டித்தூக்கம்.தினமும் குறிப்பிட்ட நேரம் தூங்குவது.
பெரும்பாலும் இப்படியான குட்டித்தூக்கம் இருந்தால் எதையும் எச்சரிக்கையாக அணுக முடியும். அத்துடன் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியும்.
பரபரப்பான வேலைக்கு நடுவே மூளைக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுத்தால் அது புத்தாக்கம் பெறும். அத்துடன் தொடர்ந்து டம்ப் செய்வது போல் அல்லாமல் இப்படி நடுவில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதால் நினைவுத் திறன் அதிகரிக்கும்.
தொடர்ந்து இப்படியான குட்டித்தூக்கம் மூலமாக ஓய்வு எடுக்கும் பட்சத்தில் மன அழுத்தம் குறையும்.
ஒரு நாள் சரியான தூக்கம் இல்லையென்றாலே நம்முடைய ரத்த நாளங்கள் பாதிப்படையும். இதனால் இதயப் பிரச்சனைகள் வருவதற்கு கூட வாய்ப்புகள் உண்டு. இது போன்ற நேரங்களில் இந்த குட்டித் தூக்கம் பெரிதும் உதவியாய் இருக்கும்.
குட்டித் தூக்கத்திற்கு பிறகு எந்த வித யோசனைகளும் இன்றி மனம் அமைதியாக இருக்கும் என்பதால் அந்நேரத்தில் சரியான முடிவுகளை நம்மால் எடுக்க முடியும்.
முக்கிய குறிப்பு
20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை தூங்கலாம். இதற்கு மேலே சென்றால் இரவுத் தூக்கம் பாதிக்கப்படும்.