யாழ்.தனியார் பல்கலைக்கழகத்தினால் விண்ணில் ஏவப்படவுள்ள முதல் செய்மதி - வெளியான அறிக்கை!

Jaffna India
By Kirthiga Oct 07, 2024 07:29 AM GMT
Report

இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள SLIIT Northern Uni, தனது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த முதலாவது செய்மதியை விண்ணில் செலுத்தவுள்ளது.

மாணவர்களின் தலைமையிலான செயற்கைக்கோள் திட்டத்தை தொடங்குவதற்கு Space Kidz இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

குறித்த திட்டமானது, Northern Uni மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள அரச பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களையும், இந்திய மாணவர்களையும் ஒன்றிணைத்து செயற்கைக்கோளை வடிவமைத்து உருவாக்கி விண்ணில் செலுத்தவுள்ளது.  

இது குறித்து SLIIT Northern Uni ஓர் அறிக்கையும் வெளியிட்டுள்ளது.

SLIIT Northern Uni வெளியிட்ட அறிக்கை

“SLIIT Northern Uni ஆனது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தனது முதலாவது செய்மதியை இந்தியா - இலங்கை பங்காண்மையுடன் விண்ணில் செலுத்தவுள்ளது.

விண்வெளி ஆய்வு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்க்கல்லை குறிக்கும் வகையில், SLIIT Northern Uni, ஒரு செய்மதியை விரைவில் கோளச்சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கான தனது முதலாவது விண்வெளி திட்டத்தை அறிமுகப்படுத்தி, அறிவிப்பதில் பெருமிதம் கொள்கின்றது.

யாழ்.தனியார் பல்கலைக்கழகத்தினால் விண்ணில் ஏவப்படவுள்ள முதல் செய்மதி - வெளியான அறிக்கை! | Sliit Northern Uni Launch Satellite Project

அறிவியல் கூட்டாண்மை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை வளர்ப்பதற்கான பாலமாக செயற்படும் இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் அமையவுள்ளது.

இம்முயற்சி தேசிய எல்லைகளைக் கடந்து, விண்வெளி அறிவியலை மேம்படுத்துவதற்கும், யாழ்ப்பாண பிராந்தியம் உட்பட இலங்கை முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கு அதிநவீன விண்வெளி தொழில்நுட்பத்திற்கான வெளிப்பாட்டைப் பெறுவதற்கும் சம வாய்ப்புக்களை வழங்குவதற்குமான இலட்சியத்தை பிரதிபலிக்கின்றது.

யாழ்பாணத்திற்கும் இலங்கைக்கும் மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை

இச் செய்மதி திட்டத்தின் ஊடாக முதன் முறையாக, இலங்கையின் வட பிராந்தியத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், அரச பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் விண்வெளி தொழில்நுட்பத்திற்கான நேரடி வெளிப்பாட்டைப் பெறுகின்றார்கள்.

SLIIT Northern Uni யின் செய்மதி செயற்றிட்டமானது கல்வியில் ஒரு திருப்புமுனையை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமன்றி, தொழில்நுட்ப அணுகலில் உள்ள இடைவெளியை நிரப்ப உதவுவதன் மூலம் வெவ்வேறு கல்வித்துறையை சேர்ந்த மாணவர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டு வருகின்றது.

செய்மதியை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியின் மூலம் கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களிலிருந்து இலங்கை முழுவதிலுமுள்ள அனைத்து தரப்பு மாணவர்களும் நன்மையடைவார்கள் என்பதை உறுதி செய்யும் நோக்கோடு இந்திரகுமார் பத்மநாதன் அவர்களால் (SLIIT Northern Uni - தலைவர்) இம்முயற்சியானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த இலட்சிய பணிக்கு ஆதரவளிக்கும் வகையில் SLIIT Northern Uni - ஆனது, விண்வெளித்துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான Space Kidz உடன் கைகோர்த்துள்ளது.

Space Kidz இந்தியா என்பது விண்வெளியில் பெண்களுக்காக வாதிடுவதைத் தவிர, உலகெங்கிலும் உள்ள இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் ஒரு விண்வெளி புத்தாக்க நிறுவனம் ஆகும்.

யாழ்.தனியார் பல்கலைக்கழகத்தினால் விண்ணில் ஏவப்படவுள்ள முதல் செய்மதி - வெளியான அறிக்கை! | Sliit Northern Uni Launch Satellite Project

செய்மதி உருவாக்குதலில் அவர்களின் விரிவான அனுபவம் SLIIT Northern Uni யின் இச்செயற்றிட்டத்தின் வெற்றிக்கு முக்கிய கருவியாக அமையவுள்ளது. கலாநிதி ஸ்ரீமதி கேசன் SLIIT Northern Uni யின் இச்செயற்றிட்டத்திற்கு இயக்குனராக தலைமை தாங்கவுள்ளார்.

இந்தியாவும் இலங்கையும் இணைந்து செயற்படுவதால், அடுத்த தலைமுறை விண்வெளி ஆர்வலர்களை ஊக்குவிப்பதற்கும் கற்பிப்பதற்கும் பகிரப்பட்ட நிபுணத்துவத்தின் முக்கியத்துவத்தை இவ் ஒத்துழைப்பு வழங்குகின்றது.

SLIIT Northern Uni ஆனது சர்வதேச ஒத்துழைப்பை அடையாளப்படுத்தும் வகையில் உலக விண்வெளி வாரத்தின் போது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றது.

உலக விண்வெளி வார அமைப்பின் நிர்வாக இயக்குனர் Ms. Alma Okpalefe, இச் செயற்றிட்டத்தினை ஆதரிப்பதற்கும் இவ் உலகளாவிய விண்வெளி முயற்சியின் முக்கியத்துவத்தைக் கொண்டாடுவதற்கும் எங்களுடன் இணையக் காணொளியின் ஊடாக இணைந்து கொண்டதையிட்டு நாங்கள் பெருமை கொள்கின்றோம்.

கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்கள்:

இச்செய்மதியானது அதிநவீன கருவிகளை உள்ளடக்கி விண்வெளி வளிமண்டலத்தை ஆய்வு செய்யவும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பங்களை நிரூபிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன் விஞ்ஞான நோக்கங்களுக்கு மேலதிகமாக, இத் திட்டம் கல்வி மற்றும் ஆராய்ச்சி இலக்குகளை உள்ளடக்கிய ஒரு பரந்த பணிக்கு உதவுகின்றது, அவையாவன:

கல்வி அனுபவம் : செய்மதி தொழில்நுட்பம், விண்வெளி பயணங்கள் மற்றும் அதிநவீன ஆராய்ச்சி ஆகியவற்றில் மாணவர்களுக்கு முதல் வெளிப்பாட்டை வழங்குதல்

திறன் மேம்பாடு : செய்மதி மேம்பாடு, தரவு பகுப்பாய்வு மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பங்கள், STEM (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) இல் மாணவர்களை எதிர்கால வாழ்க்கைக்கு தயார்படுத்துதல் போன்ற திறன் வளர்ப்புக்கான வாய்ப்புக்களை வழங்குதல்

ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு : அற்புதமான ஆராய்ச்சியில் ஈடுபடவும், சமூகத்திற்கு பயனளிக்கக்கூடிய புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளுக்கு பங்களிக்கவும் மாணவர்களை ஊக்குவித்தல்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

கூட்டு முயற்சி

SLIIT Northern Uni ஆனது இலங்கை கல்வி அமைச்சுடன் கைகோர்த்து பரீட்சைகளை நடாத்தி திறமை அடிப்படையில் மாணவர்களைத் தெரிவு செய்யவுள்ளது.

பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயற்படும் இத் திட்டத்திற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் ஆதரவு வழங்கியுள்ளது.

அரச - தனியார் கூட்டாண்மையின் ஊடாக இலங்கையின் முதலாவது செய்மதியை விண்ணில் செலுத்துவதே இம்முயற்சியின் நோக்கமாகும்.

யாழ்.தனியார் பல்கலைக்கழகத்தினால் விண்ணில் ஏவப்படவுள்ள முதல் செய்மதி - வெளியான அறிக்கை! | Sliit Northern Uni Launch Satellite Project

கட்டம் 1 

இலங்கை மற்றும் இந்தியாவில் மாணவர்களைப் பயிற்றுவித்தல் - விண்வெளி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப கண்ணோட்டம்

இலங்கையில் இருந்து 50 பாடசாலை மாணவர்களும், 50 பல்கலைக்கழக மாணவர்களும் இந்தியாவிலிருந்து 10 பாடசாலை மாணவர்களும் தெரிவு செய்யப்படவுள்ளார்கள்.

கட்டம் 2

• 30 பல்கலைக்கழக மாணவர்கள் செய்மதி உருவாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாக இருப்பார்கள்.

• இலங்கையைச் சேர்ந்த 15 பல்கலைக்கழக மாணவர்களும் 50 உயர்நிலைப் பாடசாலை மாணவர்களும் இந்தியாவில் SLIIT Northern Uni யின் செய்மதி விண்ணில் செலுத்தும் நிகழ்வில் பங்குபற்றுவதற்கு விஜயம் செய்வார்கள்.   

பல்வேறு கல்வி செயற்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலம், செய்மதி திட்டம் STEM கல்வியை மேம்படுத்துவதையும் எதிர்கால சந்ததியினரை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

SLIIT Northern Uni யின் செய்மதி செயற்றிட்டமானது கைத்தொழில்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் கூட்டிணைப்பை உருவாக்கும் ஆற்றலையும் நன்மையையும் கொண்டுள்ளது.

வருங்கால சந்ததியினரை ஊக்குவித்தல்

இச் செய்மதி விண்வெளியில் செலுத்துதல் ஒரு தொழில்நுட்ப சாதனை மட்டுமல்லாது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பங்களிக்க வேண்டும் என கனவு காணும் எண்ணற்ற மாணவர்களுக்கு இது நம்பிக்கை மற்றும் உத்வேகத்தின் அடையாளமாகும்.  

புத்தாக்கங்களை உருவாக்கும்

SLIIT Northern Uni யின் இந்த முயற்சியானது, இலங்கையை கடந்து விண்வெளி ஆய்வின் எதிர்காலத்தை வடிவமைக்கும் இளைஞர்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் பிரச்சினைகளைத் தீர்ப்பவர்கள் மற்றும் புத்தாக்கங்களை உருவாக்கும் ஒரு தலைமுறையை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

SLIIT Northern Uni

SLIIT Northern Uni ஆனது STEM பாடங்களில் விசேடமாக கவனம் செலுத்தி வருவதுடன் உலகத்தரம் வாய்ந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதற்கும் புத்தாக்க உருவாக்கங்களை மாணவர்கள் மத்தியில் வளர்ப்பதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது.

SLIIT Northern Uni அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குகின்றது. மேலும், அதன் செய்மதி திட்டம் இலங்கையில் விண்வெளி தொழில்நுட்பத்திற்கான அணுகலை விரிவுபடுத்துவதில் ஒரு முக்கியமான படியாகும்.

இந்திரகுமார் பத்மநாதன் அவர்களின் நீண்ட கால கனவுகளில் ஒன்றாகிய SLIIT Northern Uni ஆனது 2022ம் ஆண்டில் நிறுவப்பட்டது.

யாழ்.தனியார் பல்கலைக்கழகத்தினால் விண்ணில் ஏவப்படவுள்ள முதல் செய்மதி - வெளியான அறிக்கை! | Sliit Northern Uni Launch Satellite Project

இலங்கையின் பின்தங்கிய மாகாணங்களான வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பம் மற்றும் வணிகத்துறை கல்விகளை வழங்கும் முகமாக SLIIT Northern Uni உருவாக்கப்பட்டது. கூட்டுறவு விதிமுறைகள், வேலை வாய்ப்புகளிற்கான சிறந்த தொழில்நுட்பம் மற்றும் வணிக கற்கைநெறிகளுடன், SLIIT Northern Uni மாணவர்களின் எதிர்காலத்திற்கான திறன்களை உருவாக்குவதை உறுதி செய்கிறது.

SLIIT Northern Uni ஆனது உள்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமல்லாது சர்வதேச மாணவர்களுக்கும் வெவ்வேறு துறைகளில் பட்டப்படிப்புக்களை வழங்கி வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறப்பதன் மூலம் இந்நிறுவனம் வடக்கு - கிழக்கு பகுதிக்கு மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

திறமையான மாணவர்களை நாட்டினுள் தக்கவைத்துக்கொள்வதன் மூலம் SLIIT Northern Uni அந்நியச் செலாவணியை சேமிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றது.

தகவல் தொழில்நுட்பம்

புத்தாக்கங்களை இயக்கி இலங்கைக்கு வருவாயைக் கொண்டுவரும் உயர் திறமையான நிபுணர்களை உருவாக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.   

SLIIT Northern Uni ஆனது 300 ற்கும் மேற்பட்ட மாணவர்களுடன் தனது இரண்டாம் வருட செயற்பாட்டினுள் அடியெடுத்து வைக்கின்றது.

SLIIT Northern Uni, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறைகளில் கற்கை நெறிகளை மாணவர்களுக்கு வழங்குவதற்காக உலகளாவிய பல்கலைக்கழகங்கள் பலவற்றுடன் தீவிரமாக கை கோர்த்து வருகின்றது.

இதன் மூலம் கணிசமாக குறைந்த செலவில் Curtin பல்கலைக்கழகம் (அவுஸ்திரேலியா) மற்றும் Bedfordshire பல்கலைக்கழகம் (இங்கிலாந்து) போன்ற முதன்மையான வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கான அணுகலைப் பெறுவதற்கான இலகுவான பாதையை இலங்கை, இந்தியா, நேபாளம் மற்றும் பங்களாதேஷில் உள்ள மாணவர்களுக்கு வழங்குகின்றது.

Space Kidz இந்தியா

யாழ்.தனியார் பல்கலைக்கழகத்தினால் விண்ணில் ஏவப்படவுள்ள முதல் செய்மதி - வெளியான அறிக்கை! | Sliit Northern Uni Launch Satellite Project

Space Kidz இந்தியா என்பது ஒரு இந்திய விண்வெளி புத்தாக்க முன்னோடி ஆகும். இது சிறிய செயற்கைக்கோள்கள், விண்கலங்கள் மற்றும் தரை அமைப்புகளின் வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் விண்வெளிக்கு செலுத்துதல் ஆகியவற்றில் முன்னோடியாக உள்ளது.

கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பொருளாதார மற்றும் நிலையான அணுகலை விண்வெளிக்கு வழங்குவதே இதன் குறிக்கோள் ஆகும்.

Space Kidz ஆனது 7 வருடத்திற்கும் மேற்பட்ட அனுபவத்துடன், 19 ற்கும் மேற்பட்ட NSLVs (BalloonSats), 3 Suborbital Payloads மற்றும் 5 சுற்றுப்பாதை செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.

மேலும் Space Kidz ஆனது "NASA", "ESA" "GCTC ரஷ்யா" போன்ற விண்வெளி முகாம்களின் தூதர்கள் ஆகும். இந்தியாவிலும் உலகெங்கிலும் விண்வெளி அறிவியலின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் Space Kidz இந்தியா முக்கிய பங்கு வகிக்கின்றது.“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

02 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வல்வெட்டித்துறை

16 Jul, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US