வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம்... டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு முக்கிய அறிக்கை
டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து அவரது மகனும், நடிகருமான சிம்பு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்ட டி.ராஜேந்தர், 19ம் திகதி சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே, மருத்துவமனையில் உள்ள டி.ராஜேந்திர், உடல்நிலை தேறி வருவதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், தந்தையின் உடல்நிலை குறித்து நடிகர் சிலம்பரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் “எனது தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்ப்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்.
அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாடு அழைத்து செல்கிறோம்.
அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.
— Silambarasan TR (@SilambarasanTR_) May 24, 2022
உக்ரைனில் ராணுவத்தளம் அமைக்கும் ரஷ்யா!