இறுதியில் நீண்ட நாள் கனவை கைவிட்ட மன்னர் சார்லஸ்: 11 உறுப்பினர்கள் என உறுதி
செயற்படும் ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைத்து, பொதுமக்களுக்கு மேலதிக சேவைகள்
செயற்படும் ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் எண்ணிக்கை 11 என தொடரவே மன்னர் முடிவு
ராணியார் இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பின்னர் செயற்படும் ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவை மன்னர் சாலர்ஸ் கைவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் மன்னராக சார்லஸ் முடிசூடவிருக்கும் நிலையில், செயற்படும் ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டு, பொதுமக்களுக்கு மேலதிக சேவைகள் முன்னெடுக்க வேண்டும் என அவர் விருப்பம் கொண்டிருந்தார்.
@getty
இவரது திட்டத்திற்கு ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்ற போதும், மன்னர் சார்லஸ் தமது ஆலோசகர்களுடன் குறித்த திட்டம் தொடர்பில் பல கட்ட ஆலோசனை மற்றும் விவாத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தமது தாயார் ராணியார் இரண்டாம் எலிசபெத் போன்றே சார்லஸ் மன்னரும் வரி செலுத்த முன்வந்துள்ளார். மட்டுமின்றி, 23 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான கார்ன்வால் எஸ்டேட் தமது கைவசம் வந்துள்ளதை அடுத்து இளவரசர் வில்லியமும் 5.8 மில்லியன் பவுண்டுகள் வருமான வரி செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
@PA
இந்த நிலையில், செயற்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டால், அதனால் ராஜகுடும்பத்தை நம்பி செயல்படும் தொண்டு நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் என்ற கவலையும் எழுந்தது.
இதன் அடிப்படையில், தற்போது மன்னர் சார்லஸ் தமது முடிவில் இருந்து விலகியதாகவும், இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதி அதிக வேலைப்பழுவை ஏற்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
@getty
ஆனால், தமது பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவே தாம் முடிவு செய்துள்ளதாகவும், ராஜகுடும்பத்தின் வருவாயை பெருக்க தம்மால் தற்போது ஈடுபாட்டுடன் செயல்பட முடியாது எனவும் கேட் மிடில்டன் தெரிவித்துள்ளார்.
மேலும், இளவரசர் ஹரி- மேகன் தம்பதி மற்றும் இளவரசர் ஆண்ட்ரூ ஆகிய மூவரும் தற்போது செயற்படும் உறுப்பினர்கள் வரிசையில் இல்லை என்பதால், எஞ்சிய உறுப்பினர்களுக்கு வேலைப்பழு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
@getty
தற்போதைய சூழலில், செயற்படும் ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் எண்ணிக்கை 11 என தொடரவே மன்னர் முடிவு செய்துள்ளதாகவும்,
இதில் புதிதாக கமிலா ராணியார் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், இளவரசி ஆன் இனி வரும் நாட்களில் முக்கிய பங்காற்றுவார் என்றே கூறப்படுகிறது.