'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷம்.. தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறதா திமுக? அண்ணாமலை ஆவேசம்
வாக்குக்காக தீவிரவாதத்தை திமுக ஊக்குவிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டடமாக விமர்சித்துள்ளார்.
உதயநிதிக்கு மட்டும் வேலைவாய்ப்பு
தமிழக மாவட்டம், நாமக்கல்லில் 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தில் உள்ள 35 அமைச்சர்களில் ஒருவர் கூட பழங்குடி இனத்தை சேர்ந்தவரர்கள் இல்லை.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் 3.50 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவோம் என கூறியிருந்தது. ஆனால், இதுவரை 12 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை கொடுத்துள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதிக்கு மட்டுமே வேலை வாய்ப்பை வழங்குகிறார்" என்றார்.
பாகிஸ்தான் ஜிந்தாபாத்
மேலும் பேசிய அண்ணாமலை, "பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் டி ஷர்ட்களை திமுகவினர் அணிந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷத்தை எழுப்பினர். வாக்கு வங்கி வேண்டும் என்பதற்காக திவீரவாதத்தை திமுக ஊக்குவிக்கிறது.
ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு போடுகின்றனர். தமிழகம் வன்முறைக் களமாக மாறி வருகிறது” என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |