ஒலிம்பிக் போட்டியின் நடுவே சுருண்டு விழுந்த நீச்சல் வீராங்கனை: மருத்துவமனையில் அனுமதி
ஸ்லோவாக்கியன் நீச்சல் வீராங்கனை 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மயங்கி விழுந்த நீச்சல் வீராங்கனை
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இன்று பெண்களுக்கான 200 மீட்டர் தனிநபர் மெட்லே (நீச்சல் போட்டி) La Defense Arena-வில் நடைபெற்றது.
இந்த போட்டியின் போது 21 வயது ஸ்லோவாக்கியன் நீச்சல் வீராங்கனை தமரா போட்டோக்கா (Tamara Potocka) போட்டி முடிந்து நீரில் இருந்து வெளியேறியதும் மயங்கி விழுந்தார்.
அவரை உடனடியாக சூழ்ந்து கொண்ட மருத்துவ உதவி குழுவினர் தேவையான முதலுதவி சிகிச்சை அளித்து நீச்சல் குளத்திற்கு அருகே இருந்து வெளியே தூக்கி சென்றனர்.
மேலும் அவரின் உடல்நிலையை கண்காணிப்பதற்காக மருத்துவமனையில் Potocka அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஸ்லோவாக்கியன் அணியின் அதிகாரிகள் PA செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவலில், Potocka தனது போட்டியின் முடிவுக்கு பிறகு ஆஸ்துமா-பாதிப்பால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
போட்டியில் இருந்து வெளியே Potocka
இன்று நடைபெற்ற முடிந்த போட்டியில் Potocka 7 வது இடம் பிடித்தார், அவர் போட்டியை 2 நிமிடங்கள் 14.20 நொடிகளில் நிறைவு செய்ததால் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார்.
Potocka 2024 European Championships போட்டிகளில் நான்கு முறை இறுதிப் போட்டியாளராக முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |