லதா மங்கேஷ்கருக்கு Slow Poison! அன்றே பரபரப்பை கிளப்பிய சம்பவம்

lata mangeshkar
By Fathima Feb 07, 2022 10:46 AM GMT
Report

பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்பட்டவர் லதா மங்கேஷ்கர். இவர் கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, லதா மங்கேஷ்கர் தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பும் இருந்தது உறுதியானது. மேலும், அவருக்கு மூச்சு திணறல் உட்பட பல பிரச்சனைகள் ஏற்பட்டதால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர் கொரோனாவிலிருந்து மீண்டதை அடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட வெண்டிலேட்டர் சிகிச்சை நீக்கப்பட்டது.

ஆனால், நேற்று முன்தினம் மீண்டும் அவரது உடல்நிலை மோசமானது. இதன் பின்பு, அவருக்கு மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை லதா மங்கேஷ்கர் உயிரிழந்தார்.

அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று மாலை மும்பை சிவாஜி பார்க்கில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், லதா மங்கேஷ்கருக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்ட தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

4 வயதிலேயே பாடத் தொடங்கிய லதா மங்கேஷ்கர், 65 ஆண்டுகள் இசை உலகின் முடிசூடா ராணியாக விளங்கினார். 36 மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி இருக்கிறார். லதா மங்கேஷ்கர் இசை உலகில் உச்சத்தில் இருந்த போது இவரது வளர்ச்சி பிடிக்காத சிலர் இவர் சாப்பிட்ட உணவில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

எழுத்தாளர் பத்மா சச்தேவ் எழுதியுள்ள தனது புத்தகத்தில் 1963ம் ஆண்டு லதா மங்கேஷ்கருக்கு மர்ம நபர் ஒருவர் ஸ்லோ பாய்சன் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

அப்போது 33 வயதே ஆன லதா மங்கேஷ்கர், 3 நாட்கள் மரணப்படுக்கையில் கிடந்துள்ளாராம்.

இதனையடுத்து, அவருக்கு உணவு கொடுத்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை தேடினார்களாம். அந்த நபர் தலைமறைவாகி விட்டார் என்று கூறப்படுகிறது.

அந்நேரத்தில் லதா மங்கேஷ்கரை போட்டியாக நினைத்த பாடகிகள் சிலர் மற்றும் பாடலாசிரியர் ஒருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. 

மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US