46 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆன இலங்கை அணி! காமன்வெல்த் தொடரில் படுமோசமான தோல்வி
காமன்வெல்த் தொடரில் இலங்கை மகளிர் அணி 46 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆகியுள்ளது.
இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி பெர்மிங்காமில் நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. கேப்டன் சமரி அதபத்து ஒருபுறம் போராடினாலும், அவரால் அதிக ஓட்டங்களை குவிக்க முடியவில்லை.
தென் ஆப்பிரிக்க அணியின் நடினே டி கிளெர்க் மூன்று வீராங்கனைகளை ஆட்டமிழக்க செய்தார். ஆறாவது விக்கெட்டாக ஆட்டமிழந்த சமரி அதபத்து 15 ஓட்டங்கள் எடுத்தார்.
icc-cricket
அவரைத் தவிர மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இலங்கை அணி 17.1 ஓவர்களில் 46 ஓட்டங்களுக்கு சுருண்டது.
தென் ஆப்பிரிக்க தரப்பில் நடினே டி கிளெர்க் 3 விக்கெட்டுகளையும், கிளாஸ் 2 விக்கெட்டுகளையும், இஸ்மைல், மலபா மற்றும் ட்ரியோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 6.1 ஓவர்களில் 49 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போஸ்ச் 20 ஓட்டங்களும், பிரிட்ஸ் 21 ஓட்டங்களும் எடுத்தனர்.
PC: Twitter (@ICC)