ஆசியக் கோப்பையில் த்ரில் வெற்றி! இலங்கையின் பெண் சிங்கப்படை மிரட்டல்
அதிகபட்சமாக இலங்கை வீராங்கனை நிலக்ஷி டி சில்வா 28 ஓட்டங்கள் எடுத்தார்
இரண்டு ஓவர்கள் வீசி 7 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இனோக ரணவீர சிறந்த வீராங்கனை விருதை பெற்றார்
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஆசியக் கோப்பை தொடரின் இன்றைய டி20 போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை மகளிர் அணி 18.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 83 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் முதல் இன்னிங்ஸ் நிறுத்திக்கொள்ளப்பட்டது.
Twitter(@WomensCricZone)
அதன் பின்னர் வங்கதேச அணி 7 ஓவர்களில் 41 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி 7 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 37 ஓட்டங்கள் எடுத்ததால், இலங்கை அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
Twitter(@WomensCricZone)
இலங்கை அணி தரப்பில் இனோக ரணவீர 4 விக்கெட்டுகளையும், ஒஷதி ரணசிங்கே ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
[
Twitter(@WomensCricZone)