அமீரக அணியை தட்டி தூக்கிய இலங்கை படை!
இலங்கையின் ஹர்ஷிதா மாதவி ஆட்டத்தின் சிறந்த வீராங்கனை விருதை பெற்றார்
இலங்கை அணி தனது அடுத்த போட்டியில் தாய்லாந்து அணியை 4ஆம் திகதி எதிர்கொள்கிறது
மகளிர் ஆசியக் கோப்பையில் இலங்கை அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது.
மகளிர் இலங்கை அணி மற்றும் மகளிர் ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை டி20 போட்டி இன்று நடந்தது.
முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 109 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்ஷிதா மாதவி 37 ஓட்டங்கள் எடுத்தார். அமீரக அணி தரப்பில் வைஷ்ணவி மற்றும் மஹிகா கவுர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Twitter
பின்னர் களமிறங்கிய அமீரக அணிக்கு 11 ஓவர்களில் 66 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் அந்த அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 54 ஓட்டங்களே எடுக்க முடிந்ததால், இலங்கை அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணியின் தரப்பில் கவிஷா மற்றும் இனோக தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.