உலகக்கோப்பையில் மிரட்டலாக இரண்டாவது வெற்றி பெற்ற இலங்கை! கேப்டன் கூறிய ரகசியம்
மகளிர் உலகக்கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அபார பந்துவீச்சு
கேப் டவுனின் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வங்கதேச அணி முதலில் களமிறங்கியது. தொடக்கத்தில் நிதானமாக ஓட்டங்களை சேர்த்த வங்கதேச அணி 10 ஓவர்களில் 71 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
Brilliant Powerplay for Bangladesh despite the loss of two wickets ?
— ICC (@ICC) February 12, 2023
Follow LIVE ?: https://t.co/bXzXkKY2Qo#BANvSL | #T20WorldCup | #TurnItUp pic.twitter.com/SHtXCa2NUm
அதன் பின்னர் ஒஷாதி, இனோக ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த வங்கதேசம், 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 126 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை தரப்பில் ஒஷாதி ரணசிங்கே 3 விக்கெட்டுகளையும், சமரி அதப்பத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Bangladesh set a target of 127 for Sri Lanka!
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) February 12, 2023
It's time to hunt down this target! #LionessRoar? #SLvBAN #T20WorldCup pic.twitter.com/WSCaAaWp0V
ஹர்ஷிதா மாதவி
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில், தொடக்க வீராங்கனை ஹர்ஷிதா மாதவி அதிரடியில் மிரட்டினார். இறுதிவரை களத்தில் நின்ற அவர், 50 பந்துகளில் 69 ஓட்டங்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார்.
A top knock by Harshitha Samarawickrama!
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) February 13, 2023
??
?:https://t.co/KpEnK8Knwo#LionessRoar #SLvBAN #T20WorldCup pic.twitter.com/nutgusht2u
அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலக்ஷி டி சில்வா 41 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை அணி 18.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 129 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. வங்கதேச தரப்பில் மருஃபா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹர்ஷிதா மாதவி ஆட்டத்தின் சிறந்த வீராங்கனை விருதை பெற்றார்.
Harshitha Samarawickrama and Nilakshi de Silva’s ice-cool hundred partnership steered Sri Lanka to a seven-wicket win over Bangladesh as they continued their winning start to the ICC Women’s #T20WorldCup 2023.
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) February 13, 2023
?: https://t.co/KpEnK8Knwo#LionessRoar #SLvBAN pic.twitter.com/2OV1cOAaXb
கேப்டன் சமரி அதப்பத்து
இந்த உலகக்கோப்பையில் இலங்கை அணி தொடர்ச்சியாக பெற்ற இரண்டாவது வெற்றி ஆகும். இலங்கை கேப்டன் சமரி அதப்பத்து வெற்றி குறித்து கூறுகையில், 'எங்கள் அணியில் வலிமையான ஆறு துடுப்பாட்ட வீராங்கனைகள் உள்ளனர். அதனால் ஒன்று அல்லது இரண்டு துடுப்பாட்ட வீராங்கனைகளை நம்பி இருக்கவில்லை. எங்களின் புதிய பயிற்சியாளர் புதிய வியூகத்தை அறிமுகம் செய்தார். மேலும் எங்கள் அணியில் நிறைய நேர்மறை எண்ணங்கள் உள்ளன, எங்கள் இயல்பான ஆட்டத்தை விளையாட முயற்சிக்கிறோம்' என தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி 16ஆம் திகதி செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடக்கும் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை சந்திக்கிறது.
Brilliant spell by the skipper, who made the crucial breakthrough! ?
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) February 13, 2023
?:https://t.co/KpEnK8Knwo#LionessRoar #T20WorldCup #SLvBAN pic.twitter.com/lPXwctj5Ew