எங்கள் அணி அவுஸ்திரேலியாவை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறும்! இலங்கை கிரிக்கெட் வாரியம்
மகளிர் உலகக்கோப்பையில் இன்று நடக்கும் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுமுதலிடத்திற்கு முன்னேறும் என கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இலங்கை முன்னிலை
தென் ஆப்பிரிக்காவில் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. செயின்ட் ஜார்ஜ் பார்க்கில் இன்று நடக்கும் போட்டியில் இலங்கை - அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இரண்டு அணிகளும் தாங்கள் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. எனினும், ரன்ரேட் அடிப்படையில் தற்போது புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது.
புள்ளிப்பட்டியலில் முதலிடம்
இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பதிவில், 'இன்று இரவு செயிண்ட் ஜார்ஜ் பூங்காவில் நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியாவை சந்திக்கும்போது, இலங்கை அணி டி20 உலகக்கோப்பை அட்டவணையில் முதலிடத்தில் முன்னேறும். வீராங்கனைகளுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்!' என தெரிவித்துள்ளது.
Sri Lanka will look to move to the top of the #T20WorldCup table when they meet defending champions Australia tonight at St. George's Park.
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) February 16, 2023
Good Luck, Ladies! ?#LionessRoar #T20WorldCup #SLvAUS pic.twitter.com/JtR3iIrKj0
இலங்கை கேப்டன் சமரி அதப்பத்து, ஒஷாதி ரணசிங்கே, இனோக ரணவீர ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதேபோல் அவுஸ்திரேலியாவில் ஹீலே, கார்ட்னர், எலிசி பெர்ரி ஆகியோரும் நல்ல ஃபார்மில் உள்ளதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
@AFP