2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம்
2025ம் ஆண்டு சிறிய படகுகள் மூலமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 41,4722 என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது பெரிய எண்ணிக்கை
ஆங்கில கால்வாய் வழியாக சிறிய படகுகள் மூலமாக 2025ம் ஆண்டில் கிட்டத்தட்ட 41,472 புலம்பெயர்ந்தவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைந்து இருப்பதாக தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, ஒட்டுமொத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இது இரண்டாவது மிகப்பெரிய ஆண்டாகும்.

புத்தாண்டு மாலையில் புதிதாக புலம்பெயர்ந்தவர்கள் யாரும் பிரித்தானியாவுக்குள் நுழைய வில்லை என்று பிரித்தானிய உள்துறை அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 2025 ஆண்டில் கடைசியாக டிசம்பர் 22ம் திகதி சட்டவிரோத நுழைதல் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு அதிகபட்சமாக 45,774 புலம்பெயர்ந்தவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைந்த நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் 2025ம் ஆண்டு 9% குறைவாக சட்டவிரோத ஊடுருவல் நடந்து இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம் கடந்த 2024ம்(36,816) ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13% அதிகமான சட்டவிரோத ஊடுருவல் நடந்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் ஒரு சிறிய படகில் சராசரியாக 62 பேர் வரை பயணம் செய்து இருப்பதாகவும் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |