ஐரோப்பாவில் செயல்படும் கும்பல்களுக்கு உதவிய 49 வயது பெண்: பிரித்தானியாவில் கைது
துருக்கியில் இருந்து கும்பல்களுக்கு படகுகளை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் 49 வயது பெண்ணொருவரை பிரித்தானியாவின் NCA விசாரித்து வருகிறது.
வெளிநாட்டினரின் எண்ணிக்கை
பிரித்தானியாவில் தங்குவதற்கான விசாக்களை நீட்டிக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை, முதல் முறையாக ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
தரவுகளின்படி, விசா நீட்டிப்புகளின் எண்ணிக்கை 28 சதவீதம் உயர்ந்து 1,041,786 ஆக உயர்ந்துள்ளது. இது ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 230,000 ஆகும்.
மொத்த புகலிடக் கோரிக்கைகளில் நான்கில் ஒன்று 43,600 ஆகும். இவை சிறிய படகுகளில் குடியேறிவர்களால் செய்யப்பட்டது ஆகும். மீதமுள்ளதை இங்கு ரகசியமாக வந்தவையாகும்.
இதுபோன்ற குடியேற்ற குற்றங்களை தடுக்க NCA எனும் தேசிய குற்றவியல் விசாரணைக்குழு செயல்பட்டு வருகிறது.
சிறிய படகுகள் விநியோகம்
இந்த நிலையில், ஐரோப்பாவில் செயல்படும் கும்பல்களுக்கு பெண்ணொருவர் துருக்கியில் இருந்து சிறிய படகுகள் மற்றும் கடல்சார் உபகரணங்களை வழங்கியதாக சந்தேகிக்கப்பட்டார்.
அவரை கைது செய்து NCA, லண்டனின் சர்ரே குவேஸில் உள்ள ஒரு இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது. குறித்த 49 வயது பெண், சிறிய படகுகள் விநியோகத்தில் இருந்து பெறப்பட்ட நிதியைப் பெற்றதாக NCA சந்தேகிக்கிறது.
NCAயின் பிராந்திய விசாரணைத் தலைவர் இதுகுறித்து கூறுகையில், "ஒழுங்கமைக்கப்பட்ட குடியேற்ற குற்றங்களை சமாளிப்பது NCAக்கு ஒரு முக்கிய முன்னுரிமையாக உள்ளது.
மேலும், சட்டவிரோத குடியேற்றங்களை திட்டமிடுவதில் ஈடுபட்டுள்ள கும்பல்களை எங்களால் முடிந்த எந்த வகையிலும் குறிவைத்து, சீர்குலைத்து, அகற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அவர்களுக்கு படகுகள் மற்றும் உபகரணங்களை வழங்குவதில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கவனம் செலுத்துவதும் இதில் அடங்கும். எங்கள் விசாரணை தொடர்கிறது" என தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிறகு 51,000க்கும் மேற்பட்ட சிறிய படகுகள் வந்துள்ளன. இதில் 2024ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு இதுவரை எண்ணிக்கையில் 40 சதவீதம் அதிகரிப்பு அடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |