ரோகித் சர்மாவுக்காக உருவாக்கப்பட்ட தங்கத்திலான குட்டி உலகக்கோப்பை!
இந்தியாவைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் ரோகித் சர்மாவுக்காக தங்கத்திலான உலகக்கோப்பையை உருவாக்கியுள்ளார்.
சிம்மசொப்பமானமாக விளங்கும் இந்தியா
இந்தியாவில் 13வது ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடந்து வருகிறது. இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் மிரட்டலான வெற்றிகளை பெற்றுள்ளது.
குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா 84 பந்துகளில் 131 ஓட்டங்கள் விளாசி மிரள வைத்தார்.
இதன்மூலம் பல சாதனைகளை படைத்த ரோகித், தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
குட்டி தங்க உலகக்கோப்பை
இந்த நிலையில் அகமதாபாத்தைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவர், ரோகித் சர்மாவுக்காக குட்டி தங்க உலகக்கோப்பை ஒன்றை உருவாக்கியுள்ளார்.
ரவூப் ஷேக் என்ற அந்த நபர் 0.9 கிராம் எடையில், தங்கத்திலான உலகக்கோப்பை மாதிரியை 2 மாதத்தில் வடிவமைத்துள்ளார்.
மேலும், இதனை இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ரோகித் சர்மாவுக்கு வழங்க விரும்புவதாக அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |