நீளமான கூந்தலுக்கு உதவும் சின்ன வெங்காயம்: எப்படி பயன்படுத்துவது?
வெங்காயச் சாறு முடி வளர்ச்சியை மேம்படுத்துதல், பொடுகுத் தொல்லையைக் குறைத்தல் மற்றும் முடிக்கு ஊட்டமளிப்பது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை கொண்டிருக்கிறது.
அதிகப்படியாக முடி கொட்டுதல் பிரச்சனை இருப்பவர்கள் தாரளமாக சின்ன வெங்காய சாறை பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சின்ன வெங்காய சாறு, முடி கொட்டிய இடத்தில் புதிய முடி வளர உதவுகிறது.
சின்ன வெங்காய சாற்றில் கந்தகம் உள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது, இது முடி வளர்ச்சிக்கு அவசியமான புரதமாகும்.
சின்ன வெங்காய சாற்றில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை பொடுகு மற்றும் பிற உச்சந்தலையில் தொற்றுகளை குறைக்க உதவுகிறது.
இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து முடியை பாதுகாக்கிறது.
தலைமுடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கவும், உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் கலவைகள் சின்ன வெங்காயத்தில் உள்ளன.
இரத்த ஓட்டம் மயிர்க்கால்களுக்கு முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை வழங்க உதவுகிறது , மேலும் முடி வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
எப்படி பயன்படுத்த வேண்டும்?
முதலில் ஒருகைப்பிடி அளவு சின்ன வெங்காயத்தை எடுத்து கொண்டு தோலுரித்து, மிக்ஸ்யில் நன்கு அரைக்கவும்.
இப்போது அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிக்கட்டி சாறை மட்டும் தனியாக எடுக்கவும்.
இந்த சாறை நேரடியாக தலையில் தடவி 30 நிமிடம் கழித்து ஹேர் வாஷ் செய்யலாம்.
அல்லது சின்ன வெங்காய சாறை, தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து லேசாக சூடுப்படுத்தி முடியில் தடவி மசாஜ் செய்யலாம். பின்பு தலைக்கு குளிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |