அவுஸ்திரேலியாவில் இலகுரக விமானம் விபத்து! இருவர் பலி..விசாரணை தீவிரம்
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் இலகுரக விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
இலகுரக விமானம்
குயின்ஸ்லாந்தின் Toowoombaவின் வடக்கே உள்ள Oakey விமான நிலையம் அருகே, விவசாயியின் புல்வெளியில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர். அவர்களுடன் சென்ற துணை மருத்துவர்கள், விபத்திற்குள்ளான இலகுரக விமானத்தில் இருந்த இருவருக்கு சிகிச்சை அளிக்க முயன்றனர்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக பயணிகள் இருவரும் உயிரிழந்தனர். Toowoomba மாவட்ட Duty அதிகாரி மேட் ஃபோர்ப்ஸ் இறப்புகளை உறுதிப்படுத்தினார்.
Mayday அழைப்பும் விடுக்கப்படவில்லை
இந்த சம்பவம் அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்தின் விசாரணையைத் தூண்டியுள்ளது.
இந்த விமானம் வார்விக் விமான நிலையத்தில் இருந் புறப்பட்டதாக நம்பப்படுகிறது.
மேலும், விபத்திற்கு முன்னர் எந்த மே டே அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |