அவுஸ்திரேலியாவில் ஓடுபாதையில் விழுந்த சிறிய விமானம்: தீப்பிடித்ததில் 3 பேர் பலி
அவுஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
விமான விபத்து
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஷெல்ஹார்பர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து விமான ஓடுபாதையிலேயே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த எதிர்பாராத சம்பவத்தை தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் படையினர் விமானத்தில் பற்றிய தீயை அணைத்தனர்.
3 பேர் உயிரிழப்பு
துரதிர்ஷ்டவசமாக விமானத்தில் பயணித்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விமான விபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |