ஜெனீவா பள்ளிகளில் வெளிநாட்டு பிள்ளைகளை சேர்க்கும் விவகாரம்: புதிய திருப்பம்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள பள்ளிகளில் வெளிநாட்டுப் பிள்ளைகளை சேர்ப்பது தொடர்பான விவகாரத்தில் புதிய திருப்பம் ஒன்று உருவாகியுள்ளது.
ஜெனீவா மாகாணத்தின் முடிவு
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரில் சுமார் 2,500 பேர் ஜெனீவா மாகாணத்தில் வாழ்பவர்கள் அல்ல.
உண்மையில், அவர்களில் பெரும்பாலானோர் பிரான்சிலிருந்து வந்து ஜெனீவாவில் படிப்பவர்கள்.
இந்நிலையில், பள்ளிகளுக்கு வேலைப்பழு அதிகம் இருப்பதாகவும், கடும் அழுத்தம் உருவாகியுள்ளதாகவும் கூறி, அடுத்த ஆண்டிலிருந்து ஜெனீவாவுக்கு வெளியே இருந்து வரும் மாணவ மாணவியரை ஜெனீவா பள்ளிகளில் சேர்ப்பதில்லை என ஜெனீவா மாகாண கவுன்சில் முடிவு செய்துள்ளது.

ஜெனீவாவின் இந்த முடிவை எதிர்த்து பல குடும்பங்கள் அரசியல் சாசன நீதிமன்றத்தை அணுகின.
ஆனால், அரசியல் சாசன நீதிமன்றம், ஜெனீவா மாகாண கவுன்சிலுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.
அதாவது, ஜெனீவா மாகாண கவுன்சிலின் முடிவு சட்டப்படியானதே என்று கூறி, பிரான்ஸ் பிள்ளைகள் ஜெனீவாவில் படிக்க அனுமதி இல்லை என்னும் ஜெனீவா மாகாண கவுன்சிலின் முடிவை மாற்ற முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதிய திருப்பம்
இந்நிலையில், இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஒன்று தற்போது உருவாகியுள்ளது. ஆம், சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு சமரசத்திற்கு வந்துள்ளார்கள்.
அதன்படி, இப்போது ஜெனீவா பள்ளிகளில் ஆரம்பப் பள்ளிகளில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், ஆரம்பப் பள்ளிக் கல்வியை முடிக்கும் வரை தங்கள் படிப்பைத் தொடரலாம்.
அதேபோல, lower secondary பள்ளியில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களும், தங்கள் upper secondary diploma கல்வியை முடிக்கும்வரை அதே பள்ளியில் தொடர்ந்து படிக்கலாம்.
இந்த விடயம், இருதரப்புக்கும் ஒரு நல்ல முடிவாக கருதப்படும் நிலையில், ஜெனீவா பள்ளிகளில் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதை ஆதரிப்போர் இந்த முடிவை வரவேற்றுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |