இலங்கையில் மூடப்படும் பாடசாலைகள்: பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளியிட்ட முக்கிய தகவல்
இலங்கையில் சிறிய பாடசாலைகள் மூடப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மூடப்படும் சிறிய பாடசாலைகள்
இலங்கையில் குறைவான மாணவர்கள் எண்ணிக்கையுடன் செயல்பட்டு வரும் சிறிய பாடசாலைகள் மூடப்படுவதை தவிர்க்க முடியாது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், மாணவர்கள் சேர்க்கையில் உள்ள குறைபாடு காரணமாக தான் சில பாடசாலைகளில் குறைவான மாணவர்கள் உள்ளனர், எனவே அவற்றை சீரமைக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பாடசாலைகள்
குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பாடசாலைகள் மூடப்படுவதை தவிர்க்க முடியாது, ஆனால் அதற்காக அத்தகைய அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என்பதில்லை.
குறைந்த மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட சில பாடசாலைகள் தொடர்ந்து இயங்கும், ஆனால் அவை மற்றொரு பாடசாலையுடன் ஒருங்கிணைந்த பாடசாலையாக செயல்படுத்த முடியும்.
ஒரு பாடசாலைகள் மூடப்படுவதற்கு முன்பாக அப்பகுதியின் இனத்துவப்பரம்பல், சனத்தொகை , சமூக மற்றும் பொருளாதார காரணிகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்” என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |