வெறும் 320 பேர் மட்டுமே வாழும் நாடு: எங்கு இருக்கு தெரியுமா?
பொதுவாகவே ஒரு நாடு என்றால் அங்கு பல்லாயிரக்கணக்கில் மக்கள் வாழ்வது தான் வழக்கம்.
ஆனால் உலகிலேயே ஒரு சிறிய நாடு இருகின்றது. இந்நாட்டில் வெறும் 320 மக்கள் மட்டுமே இருகிறார்களாம்.
அந்நாட்டை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
உலகிலேயே சிறிய நாடு
14 கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட ஒரு நாடு இருகின்றது. இது அதன் சொந்த கொடி, சொந்த நாணயம், எல்லைகள் மற்றும் 297 பேரை ஆளும் இளவரசி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த சிறிய நாட்டின் பெயர் செபோர்கோ. கடந்த 1000 ஆண்டுகளாக சுதந்திர நாடு என்ற அந்தஸ்து பெற்றுள்ளது. இந்த நாடு சிறிய நாடாக இருந்தாலுமே, இங்கு செல்வதற்கு கட்டாயம் பாஸ்போர்ட் தேவை.
இந்நாடானது சுதந்திரப் பெற்று 1000 ஆண்டுகளுக்கு முன்னரே உரிமையாளரை இளவரசராக போப் அறிவித்தார்.
செபோர்கா 1719 ஆம் ஆண்டில் விலைக்கு விற்கப்பட்டது. 1800-ல் இத்தாலி ஒருங்கிணைக்கப்பட்ட போது, மக்கள் இந்த கிராமத்தை மறந்துவிட்டனர். 1960 ஆம் ஆண்டில், செபோர்கா முடியாட்சி முறைப்படி இத்தாலிக்குள் வரவில்லை.
ஆனால் செபோர்கோவின் இளவரசராக ஜார்ஜியோ 1 என்பவர் தன்னை அறிவித்துக் கொண்டார். இவர் அடுத்த 40 ஆண்டுகளில், அரசியலமைப்பு, நாணயம், முத்திரை மற்றும் தேசிய விடுமுறை ஆகியவற்றை உருவாக்கினார்.
வெறும் 320 பேர் கொண்ட இந்த நாட்டில் இளவரசர் மார்செலோ அடுத்த மன்னரானார்.
இளவரசி 297 பேரை ஆட்சி செய்கிறார். தற்போது, நினா என்பவர் செபோர்காவின் இளவரசியாக உள்ளார் . அவர் 2019-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நாட்டில் செபோர்கா லுய்ஜினோ நாணயம் புழக்கத்தில் உள்ளது. இது ஆறு அமெரிக்க டாலர்களுக்கு சமம். அதாவது இந்திய மதிப்பில் ஒரு செபோர்கோ நாணயம் 499 ரூபாயாகும்.
மேலும் இந்நாட்டில் அழகான வீடுகள் மற்றும் உணவகங்கள் இருப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் ஒரளவில் இருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |