Smart phone-ஐ பராமரிப்பது எப்படி? போனில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற இப்படி செய்தால் போதும்
ஸ்மார்ட் போனை பலரும் உபயோகப்படுத்தினாலும் அதை அவர்கள் சரியாக பராமரிக்கிறார்களா என்பது கேள்விக்குறியே!
சரி, ஸ்மார்ட் போன்களை பராமரிப்பது எப்படி என காண்போம்.
பேட்டரி & சார்ஜிங்
உங்கள் பேட்டரியை எப்பொழுதும் முழுவதுமாய் சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள், எனவே அவசர நேரத்தில் நீங்கள் வாய்ஸ் காலிங் அல்லது மெசேஜ் அனுப்ப எந்த தடையும் இல்லாமல் இருக்க முடியும். மேலும், எப்போதும் உங்கள் மொபைல் போன் உற்பத்தியாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட உண்மையான பேட்டரிகளை மட்டும் வாங்கி பயன்படுத்துங்கள்.
டச் லாக்
உங்கள் போனின் டச் லாக் மற்றும் கீப்பேட் லாக் சேவைகளை எப்பொழுது லாக் செய்து வைப்பது அவசியம். இதனால் உங்கள் போன், உங்கள் ஹேண்ட்பேக் அல்லது சட்டைப் பைகளில் இருக்கும் பொழுது நிகழும் தேவை இல்லாத அழைப்புகள் மற்றும் செயலிகள் டெலீட் ஆவது தடுக்கப்படும்.
ஸ்மார்ட் போன்களை சுத்தம் செய்வது அவசியம்
உங்கள் போன்களை மென்மையான துணியால் அடிக்கடி சுத்தம் செய்யலாம். ஏனெனில் தூசிகள் மற்றும் அழுக்குகள் உங்களின் போன்களை பாதிக்கக்கூடும். தண்ணீர், கடுமையான சோப்பு திரவம், சால்வெண்ட் அல்லது கடுமையான இரசாயனங்கள் போன்ற திரவங்களை போனில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
அப்படி திரவங்கள் மற்றும் அதிக ஈரப்பதம் உள்ள இடங்களில் பட்டுவிட்டால் உங்கள் போன் சேதமடையக் கூடும், அதனால் உங்கள் போன்களை சில நேரங்களில் உலர வைப்பது அவசியம்.
மொபைல் போன் கவர்
தேவை இல்லாத கீறல்கள், தூசி மற்றும் அழுக்குகளிலிருந்து உங்கள் போனை பாதுகாத்துக்கொள்ள நல்ல உறுதியான மொபைல் கவர்களை பயணப்படுத்துங்கள். உங்கள் போனை கையிலிருந்து நழுவவிடுவது அல்லது தேவையில்லாமல் வேகமாக அசைப்பது போன்ற செயல்களைத் தவிர்க்கவும்.