Smartphone பயன்படுத்தி கணினியை இயக்குவது எப்படி?
ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி தற்போது பல வேலைகளை செய்ய முடியும்.
மேலும் இப்போது வரும் கணிகளில் புதிய தொழில்நுட்பம் இடம்பெறுவதால் அனைத்து வகை சாதனங்களையும் பயன்படுத்த மிகவும் அருமையாக இயக்க முடியும்.
அதன்படி உங்கள் கணினியில் ஸ்மார்ட்போனை இணைத்து மவுஸ் போன்று பயன்படுத்த முடியும், குறிப்பாக இணைய வசதி இல்லாமல் வெறும் ஆப் வசதியை கொண்டு மட்டுமே உங்கள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் சாதனங்களை எளிமையாக இயக்க முடியும்.
மேலும் உங்கள் அண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்தி கணினியை தொடாமல் இயக்கும் வழிமுறையைப் பார்ப்போம்.
முதலில் WiFi Mouse எனும் செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யவும்.
அதேபோல் உங்கள் கணினிக்கு தகுந்த WiFi Mouse செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் லேப்டாப் அல்லது டெக்ஸ்டாப் சாதனங்களில் இன்ஸ்டால் செய்தல் வேண்டும்.
நீங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து WiFi Mouse செயலி முதலில் ஒபன் செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அதன்பின்பு உங்கள் ஸ்மார்ட்போனில் ஹாட்ஸ்பாட் ஆன் செய்து எனபிள்(enable)செய்ய வேண்டும், இதற்கு இன்டர்நெட் தேவை கிடையாது.
பின்பு உங்கள் கணினியில் வைஃபை கனெக்ட் செய்தால் போதும். எளிமையாக உங்கள் கணினியை ஸ்மார்ட்போன் மூலம் மிக அருமையாக இணைக்கலாம்.
இந்த WiFi Mouse செயலியில் கீபோர்டு வசதி உள்ளது. குறிப்பாக தமிழில் டைப் செய்ய முடியும். பின்பு உங்கள் குரல் கொடுத்தால் போதும் அதுவே டைப் செய்து விடும்.
மேலும் WiFi Mouse செயலியில் ஸ்கீரின் ஷாட் எடுக்க முடியும், இதில் உள்ள அப்பிளிக்கேஷன் விருப்பத்தை தேர்வு செய்து கணினியில் உள்ள செயலி மற்றும் க்ரோம் போன்ற அனைத்து அப்பிளிக்கேஷன்களையும் மிக அருமையாக இயக்கலாம்.
இதோடு கேமிங் போன்ற அனைத்து அனுபவங்களையும் இந்த அட்டகாசமான செயலி வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.