Smartphone திரை உடைந்து விரிசல் ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்? இப்படி மட்டும் செய்யவே கூடாது
ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் முக்கியமானது அதன் திரையில் ஏற்படும் விரிசல் தான்.
போன் கீழே கைத்தவறி விழுந்து திரை உடைந்தால் உடனே செய்யவேண்டியது என்ன?
கீறல் விழுந்தவுடன் கருவியின் திரையை தொடாமல் உடைந்த கண்ணாடி பாகங்களை பத்திரமாக நீக்க வேண்டும். இதற்கு கை குட்டை அல்லது பேப்பர் பயன்படுத்தி நீக்கலாம், கையில் மட்டும் எடுக்கவேண்டாம், கைகளில் அது குத்தி வேறு பிரச்சினையை ஏற்படுத்திவிடும்.
திரை எந்தளவு உடைந்திருக்கின்றது என்பதை பார்க்க வேண்டும். ஒரு வேலை திரையில் டெம்பர்டு கிளாஸ் போட்டிருந்தால் அதனினை பொருமையாக அகற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் திரையில் அதிகளவு அழுத்தம் கொடுக்க கூடாது.
உங்களது கருவிக்கு சரியான காப்பீடு இருந்தால் பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு வேலை கருவிக்கான காப்பீடு இல்லை என்றால் கருவியை அதிகாரப்பூர்வ நிலையத்தில் கொடுத்து சரி செய்யலாம்.
ஒரு வேலை உங்களது கருவி மிகவும் பழமையானது என்றால், சரி செய்யும் பணத்திற்கு வேறு கருவியை வாங்க முடியுமா என்பதை விசாரித்து அதன்படி செயல்படலாம்.