Smart phone-ல் சிக்னல் பிரச்சினை அடிக்கடி வந்து எரிச்சல் தருதா? சிக்னலை பூஸ்ட் செய்ய இதை பண்ணுங்க
ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலருக்கும் ஏற்படும் ஒரு எரிச்சல் அதில் சிக்னல் கோளாறு ஏற்படுவது தான். இதனால் கால் டிராப், இண்டர்நெட் வேகம் குறைவது, அழைப்புகளின் போது ஆடியோ தரம் குறைவது போன்று பல்வேறு பிரச்சனைகள் எழும்.
சரி, சிக்னல் அளவை பூஸ்ட் செய்வது எப்படி?
ஸ்மார்ட்போன் ஆன்டெனா
ஸ்மார்ட்போனினை பாதுகாக்க நீங்கள் பயன்படுத்தும் கவர் / கேஸ் சில சமயங்களில் மொபைல் போன் சிக்னலை பாதிக்கலாம். இதுபோன்ற நிலை பெரும்பாலும் தடிமனான மற்றும் ரக்கட் வகை மொபைல் கேஸ்களில் அதிகம் ஏற்படும். இதனால் மொபைல் போனின் ஆன்டெனாவை மொபைல் கேஸ் மறைக்காமல் இருப்பதை உறுதி செயய் வேண்டும்.
டவர் பிரச்சினை
செல்போன் டவர் பிரச்சினையை ஓரளவு அகற்ற ஜன்னல் அல்லது சற்றே அதிக பரப்பளவு கொண்ட இடத்திற்கு செல்லலாம். இரும்பு அல்லது சிமென்ட் சுவர் அருகே நிற்காமல் விலக வேண்டும்.
சிம் கார்டு
திடீரென மொபைல் போன் சிக்னல் குறையலாம். இதற்கு சிம் கார்டு டிரேயில் இருக்கும் தூசு அல்லது இதர சேதங்கள் காரணமாக இருக்கலாம். நாம் பயன்படுத்தும் சிம் கார்டு தரத்தை பொருத்தே நமக்கு கிடைக்கும் சிக்னல் தரம் அமையும். இதனால் மொபைலின் சிம் கார்டினை கழற்றி சுத்தம் செய்து மீண்டும் மொபைலில் போடலாம். இவ்வாறு செய்யும் போது சிக்னல் தரம் சீராகலாம்.
பேட்டரி
பேட்டரி அளவு குறையும் போது மொபைல்போன் பேட்டரி சேமிக்கப்படும் வகையில் அவை உருவாக்கப்படுகின்றன. பொதுவாக நம் மொபைலுக்கு தேவையான சிக்னலை தேடுவதிலேயே அவற்றின் சார்ஜ் குறைய ஆரம்பிக்கும். இதனால் பேட்டரி அளவு குறையும் போது சிக்னலை தேடுவது சிரமமான காரியமே. இதுபோன்ற சூழல்களில் ஆப்ஸ், ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை ஆஃப் செய்யலாம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.