ஸ்மார்ட்போன் புதிதாக வாங்கும் போது இதை கவனிங்க! இந்த தப்பை செய்ய வேணாம்
பலவிதமான மொடல்களில் புதிது புதிது புதிதாக ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வருகின்றது. ஸ்மார்ட்போன் வாங்கும் திட்டம் இருக்கா?
அதற்கு முன்னர் சில விடயங்களை கவனிக்க வேண்டும்.
ஸ்மார்ட்போன் எதனால் தயாரிக்கப்பட்டிருப்பது என்பதை கவனிக்க வேண்டும். மெட்டல் பாடி கொண்ட மொபைல்கள் உறுதியானதாக இருக்கும். தற்போது, பல ப்ரீமியம் போன்களும் மெட்டல் பாடியுடன் தான் வருகின்றன.
ஸ்மார்ட் போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை தொடுதிரையின் அளவு மற்றும் துல்லியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். HD, Full HD திரைகள் பல ஸ்மார்ட் போன்களில் உள்ளன. Full HD திரை துல்லியமாக வண்ணங்களைக் காட்டும். கைக்க்கு அடக்கமாக பயன்படுத்த அதிகபட்சம் 5 இன்ச் அளவுள்ள திரை இருந்தால் போதும். அதற்கு மேல் போனால் கைக்குள் அடங்காமல் நழுவும் வாய்ப்பு உண்டு.
அதிகமாக இன்டெர்நெட் பயன்படுத்துபவர்கள், அதிகமாக கேம் விளையாடுபவர்கள் ஸ்னாப்ட்ராகன் ப்ராசெஸர் உள்ள மொபைல்களை வாங்கலாம்.
நீடித்து நிற்கும் பேட்டரி கண்டிப்பாக கவனிக்க வேண்டிய அம்சம். இதை கவனிக்காமல் ஸ்மார்ட் போன் வாங்கினால் அடிக்கடி ப்ளக் போர்டை தேடிக்கொண்டிருக்க நேரும். அதாவது குறைந்தபட்சம் 3500mAh பேட்டரி இருக்கலாம்.
இன்டேனல் மெமரி (Internal Memory) அல்லது ரோம் (ROM) அளவு 16GB, 32GB, 64GB மற்றும் 128GB ஆகியவற்றில் கிடைக்கிறது. குறைந்தபட்சம் 16GB மெமரி கொண்ட மொபைல் வாங்குவது நல்லது.
ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார். கைரேகை மூலம் போனை லாக் அல்லது அன்லாக் செய்யும் இந்த தொழில்நுட்பம் பல ப்ரீமியம் போன்களிலும் வருகிறது, இது போனுக்கான பாதுகாப்பான உறுதி செய்யும்.