Smart phoneல் பலருக்கும் தெரியாத ஆச்சரிய Tricks! அட இவ்வோ விஷயம் இருக்கா
ஸ்மார்ட்போனை கையில் வைத்திராத நபர்களை காண்பதே மிக அரிதாகிவிட்டது.
அந்த அளவுக்கு ஸ்மார்ட் போன்கள் மனிதர்களின் வாழ்வில் முக்கியமான விடயமாகிவிட்டது.
அப்படிப்பட்ட ஸ்மார்ட் போன்களில் உங்களுக்கே தெரியாமல் உங்களை எரிச்சலூட்டும் இடையூறுகள் இருக்கும், அதை சமாளிக்கும் எளிதான ட்ரிக்ஸ் குறித்து காண்போம்.
ஸ்மார்ட்போன் சார்ஜ்இல் இருக்கும் நேரத்தில் அதனை பயன்படுத்துவதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். அப்போது தான் உடனடியாக சார்ஜ் ஏறும்.
24 மணி நேரமும் ஸ்மார்ட்போன் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. போன் கால் எதுவும் வராது, மெசேஜ் எதுவும் தேவையில்லை என்று தோன்றும் நேரத்தில் மொபைலை ஏரோபிளேன் மோட் இல் வைக்கலாம். இது சார்ஜ் சீக்கிரம் இறங்குவதை தவிர்க்கும். இதே போல், சார்ஜ் செய்யும் போத ஏரோபிளேன் மோட்டில் வைத்தால், சீக்கிரம் சார்ஜ் ஏறிவிடும்.
கேமராவில் ஷட்டர் ஆப்ஷனை நீண்ட நேரமாக அழுத்திப் பிடித்தால், சடசடவென போட்டோக்கள் எடுக்கலாம். பெரும்பாலோனருக்கு இது தெரியாது.
போட்டோ எடுக்கும் போது டச் ஸ்கீரினை பயன்படுத்துவதை விட, வால்யூம் கீ பயன்படுத்தலாம். இது போட்டோ ஷேக் ஆவதை தவிர்க்கும்.
ஸ்மார்ட்போனை குறைந்தது வாரத்திற்கு மூன்று முறையாவது ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். அப்போது தான் அதிகப்படியான மெமரி ஸ்டோரேஜ், ரேம் பயன்பாடு, ஆப் பயன்பாடு ஆகியவை சமநிலைக்கு வரும்.