ஸ்மார்ட்போனின் விலை தாறுமாறாக அதிகரிக்கின்றதா?
ஸ்மார்ட்போனின் விலைகள் 30 சதவீதம் வரை உயரவும், போனின் விற்பனை சரியவும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஸ்மார்ட்போன்
இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நபர்கள் அதிகமாகவே இருக்கின்றனர். ஆதலால் அதனை அவ்வப்போது மாற்றிவிட்டு புதிய போன் வாங்கும் எண்ணமும் தற்போது அதிகரித்துள்ளது.
ஆனால் ஸ்மார்ட்போனின் விலை தற்போது 30 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. காரணம் என்னவெனில், சமீப காலங்களில் AI தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் தாறுமாறாக அதிகரித்துள்ளது.
இதனால் மக்களும் தனது அன்றாட வாழ்க்கையில் மட்டுமின்றி அலுவலகப்பணிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கும் ஸ்மார்ட்போன் விலைக்கும் என்ன சம்மந்தம் என்று நம்மில் பலரும் யோசிக்கக்கூடும். அதனை விரிவாக காணலாம்.

விலை அதிகரிப்பிற்கு காரணம் என்ன?
ஸ்மார்ட்போனில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுவது Memory Chips தான். ஒரு ஸ்மார்ட்போனை எடுத்துக்கொண்டால் அதனை Memory அளவை வைத்தே விலையும் நிர்ணயிக்கப்படுகின்றது.
ChatGPT போன்ற AI சேவைகளை இயக்குவதற்கு மிகப்பெரிய Data Centres தேவையாக இருக்கின்றது. அதாவது ஆயிரக்கணக்கான சர்வர்கள் இயக்கும் நிலையில், ஒவ்வொரு சர்வரில் தகவலை வேகமாக சேமிக்கவும், இயக்குவதற்கும் Memory Chips கட்டாயம் தேவைப்படுகின்றது.

இதனால் AI நிறுவனங்கள் குறித்த Chip-களை அதிகமாக வாங்கும் நிலையில், இதே சிப் தான் ஸ்மார்ட்போன்களிலும் பயன்படுத்தப்படுகின்றது. ஆதலால் சிப் தேவை அதிகரித்துள்ள நிலையில், தட்டுப்பாடும் எழுந்துள்ளது.
இதனை உற்பத்தி செய்யும் அளவும் குறைவாக இருப்பதால், இதன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை ஏறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எத்தனை மடங்கு விலை உயரும்?
ஸ்மார்ட்போன் தயாரிப்பு செலவில் மிகப்பெரிய தாக்கத்தினை கொண்டுவருவதுடன், அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனம் ஒன்று தனது கணிப்பில், குறித்த Chip-ற்கு 2025ம் ஆண்டு 20 டொலர் ஆன செலவு தற்போது 60 முதல் 65 டொலராக உயர்ந்துள்ளதாம்.
அதாவது ஒரே ஆண்டில் மூன்று மடங்கு விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாம். ஆதலால் ஸ்மார்ட்போன்களின் விலை 30 சதவீதம் உயரும் என்று கூறப்படுகின்றது.

அதுமட்டுமின்றி 2026ம் ஆண்டில் சுமார் 106.7 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதுவே 2027ம் ஆண்டு இதன் எண்ணிக்கை 91.1 கோடியாக குறையவும் வாய்ப்புள்ளது. ஆதலால் உலகளவில் ஸ்மார்ட்போன் விற்பனையும் பரவலாக சரியும் என்று கூறப்படுகின்றது.
அதிலும் குறைந்த விலை போன்களின் விற்பனை அதிகம் பாதிக்கப்பட்டு, அதிக விலை கொண்ட போன்கள் சந்தையில் அதிகமாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |