Smartphoneல் 100 சதவீதம் வரை சார்ஜ் போடக்கூடாது! ஏன் தெரியுமா?
ஸ்மார்ட்போன் பயனர்கள் அனைவரும் ஒரு முறையேனும் சந்தித்திருக்கும் பிரச்சினை என்றால் அது சூடாவது தான்!
இந்த பிரச்சினையை பலரும் அடிக்கடி கூட சந்திப்பார்கள். நீண்ட நேரம் பேருந்துகளிலோ, ரயிலோ ஸ்மார்ட்போனை பயன்படுத்தினால் கூட, அதிலிருந்து வெளிவரும் வெப்பம் நமக்கு அசவுகரியமாக இருக்கும். சில ஸ்மார்ட்போன்கள் இதற்கு விதிவிலக்காக இருந்தாலும் கூட, பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இந்த பிரச்னை உண்டு.
அதை தடுப்பது எப்படி?
உங்கள் மொபைலை எப்போதுமே 100% விழுக்காடு பேட்டரியுடன் தான் வைத்திருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. எனவே 80% முதல் 90% அளவுக்கு பேட்டரி அளவு இருந்தாலே போதுமானது தான். சார்ஜ் போடும் போது நாம் செய்யும் இன்னொரு தவறு, முழுவதும் சார்ஜ் ஆன பிறகும் கூட, சார்ஜிங்கிலேயே போனை விட்டுவிடுவது. இரவு முழுவதும் போனை சார்ஜ் செய்வதுதான் பலரது பழக்கமாக உள்ளது. இப்படி தேவையில்லாமல் சார்ஜ் செய்வதும், போன் சூடாக ஒரு காரணம்தான். போன் பேட்டரி அளவை 30% முதல் 90% வரை எப்போதும் வைத்திருப்பதே, பேட்டரியின் ஆயுளுக்கும் நல்லது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
புது போன் வாங்கியதுமே, அதனை பாதுகாக்க ஏதேனும் கவர் வாங்கி மாட்டுவதுதான் ஊர் வழக்கம். அது போனின் பாதுகாப்பிற்கு நல்லது தான் என்பதை மறுக்கவில்லை. அதே சமயம், போனின் வெப்பம் குறையாமல் இருக்கவும் இவை ஒரு காரணமாக அமைகின்றன. நீண்ட நேரம் கேம் விளையாடும் போதோ, அல்லது இணையம் பயன்படுத்தும் போதோ மொபைல் அதிகம் சூடாகி விடும். அதுபோன்ற சமயங்களில் உங்கள் போன் கவரை கழற்றி விடுங்கள்.
தேவையற்ற செயலிகளை தவிர்ப்பது மிக நல்லது. இதனால் அதிகம் பேட்டரி வீணாவதோடு, போனின் வெப்பமும் அதிகமாகும்.
அதிக நேரம் மொபைல் டேட்டா மூலம் பதிவிறக்கம் செய்வது அல்லது இணையத்தில் உலாவுவது உங்கள் ஸ்மார்ட்போனை சூடாக்கும்.
மேலும், லொகேஷன் அல்லது ஜிபிஎஸ், ப்ளூடூத், மொபைல் டேட்டா ஆகியவற்றை தேவையில்லாத நேரங்களில் அணைத்து வைக்க வேண்டும்.