Smartphone பேட்டரி நீண்ட நேரம் நீடிக்கனுமா? இப்படி செய்தால் போதும்
ஸ்மார்ட்போன் வாங்கிய புதிதில் அதன் பேட்டரி தரம் சிறப்பாகவே இருக்கும், ஆனால் போக போக அதன் சக்தி படிப்படியாக குறைவதை நாம் காணமுடியும். சிறந்த பேட்டரி ஆப்ஷனுடன் கூடிய போனை வாங்கியும் கூட, அதன் பேட்டரி மிக வேகமாக தீர்ந்து நம்மை நெருக்கடியில் தள்ளும்.
போனின் பேட்டரி ஆயுளை அதிகரிக்க என்ன செய்யலாம்?
நோடிபிகேஷன்
ஸ்மார்ட்போனில் பேஸ்புக், யூடியூப் மற்றும் இதுபோன்ற பிற செயலிகளில் இருந்து வரும் புஷ் நோடிபிகேஷன்கள், அதிக பேட்டரியை சாப்பிட்டு விடும். செட்டிங்ஸ் சென்று, நீங்கள் அதிகம் பயன்படுத்தாத செயலிகளின் புஷ் நோடிபிகேஷனை ஆப் செய்து பேட்டரியைச் சேமிக்கவும்.
Wifi
Wifi பயன்படுத்துவது உங்கள் மொபைல் டேட்டாவைச் சேமிக்கிறது. ஆனால் போனின் பேட்டரி மிகவும் வீணாகிறது. வைபையை ஆனில் வைத்திருந்தால், பேட்டரி விரைவாக ட்ரெயின் ஆகும், எனவே தேவைப்படும் போது மட்டும் வைபை ஆப்ஷனை ஆன் செய்யலாம்.
indiatvnews
செயலிகள்
ஸ்மார்ட்போனில் உள்ள ஆப்ஸ்களை பயன்படுத்திய பிறகு முழுமையாக மூடிவிடவும். செயலிகள் பின்புலத்தில் கூட இயங்கிக் கொண்டே இருப்பதால், ஃபோனின் பேட்டரியை அவை சாப்பிடுகின்றன.
பவர் சேவிங் மோட்
ஸ்மார்ட்போனின் பேட்டரி வேகமாக ட்ரையின் ஆகிய நிலையில், பேட்டரியை சேமிக்க விரும்பினால், ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ள பவர் சேவிங் மோடை பயன்படுத்தினால் பலன் கிடைக்கும்.
gizbot