Smartphone வெடிப்பதற்கான காரணம் என்ன? அது போல நடக்காமல் இருக்க இதை செய்யுங்கள்
ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றனது. ஸ்மார்ட்போன்கள் உபயோகிக்கும் போதோ அல்லது சார்ஜில் போடும் போதோ அது வெடித்து சிதறும் நிகழ்வுகள் பல இடங்களில் நடக்கிறது.
ஸ்மார்ட் போன் வெடிப்பதற்கான காரணம் என்ன? மற்றும் ஸ்மார்ட் போன் வெடிப்பதைத் தடுப்பது எப்படி?
போலி பேட்டரிகள்
கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்த நீங்கள் வாங்கிய அந்த போலி பேட்டரிகளை தூக்கி எறியுங்கள். போலி பேட்டரிகள் குறைவாக விலையில் இருக்கும், ஆனால் அவை மொபைல் செயலிழப்பு மற்றும் வெடிப்பதற்க்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
முறையற்ற மின்னழுத்த வழங்கல்
பேட்டரிக்கு முறையற்ற மின்னழுத்தம் வழங்கும்போது அதிக வெப்பமாக்குகிறது, உங்கள் ஸ்மார்ட் போன்னுக்கு நீட்டிக்கப்பட்ட சார்ஜிங் செய்வதை தவிர்க்கவும், இது வெடிப்புக்கு வழிவகுக்கும்.
போலி சார்ஜர்
போலி சார்ஜரையும் தூக்கி எறியுங்கள். பொலி சார்ஜர்கள் குறைவாக விலையில் இருக்கும், இந்த போலி சார்ஜர்கள், உங்கள் பேட்டரியை மிகவும் சாத்தியமில்லாத வகையில் சார்ஜ் செய்யும் இதுவும் ஸ்மார்ட் போன் வெடிப்புக்கு. உங்கள் ஸ்மார்ட் போன் பிராண்டைப் போலவே, பேட்டரி மற்றும் சார்ஜரைப் பயன்படுத்த எப்போதும் பழகி கொள்ளுங்கள்.
தீவிர வெப்பநிலை
உங்கள் ஸ்மார்ட் போன்னை அதிக வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டாம். சர்க்யூட் போர்டுகள் வெப்பநிலைக்கு உணர்திறன் கொண்டவை. உதாரணமாக அளவுகடந்த நேரம் கேம் விளையாடுவது, செயலிக்கு அளவுகடந்த சுமை கொடுப்பது.
சார்ஜ் செய்யும்போது பேசுவது
ஸ்மார்போனை சார்ஜ் செய்யும் பேசுவதோ, கேம் ஆடுவதோ அல்லது வேறு காரணங்களுக்காக உபயோகப்படுத்துவோதோ தவறாகும்.
அதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.