ஒரு இடத்தில் ரகசிய Camera மறைத்து வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடிப்பது எப்படி? உங்கள் Smartphone போதும்
தற்போதைய நவீன டிஜிட்டல் உலகில் ரகசிய கமெராக்களை எங்கு வேண்டுமானாலும் ரகசியமாக மறைத்து வைக்கமுடியும்.
அப்படி வைக்கப்பட்டுள்ள ரகசிய கமெராக்களை ஸ்மார்ட் போனை கொண்டே கண்டுபிடிக்கலாம். ஹொட்டல் அல்லது விடுதி அறைக்குள் நுழைந்ததும் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்து விட்டு, அறைக்கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள். இருட்டில் புகைப்படம் எடுக்கும்போது வரும் பிளாஷ் (Flash)வெளிச்சத்தை ஆப் செய்து விட்டு அறையில் உள்ள சுவர் மற்றும் எல்லா பொருட்களையும் புகைப்படம் எடுங்கள்.
இப்போது எடுத்த புகைப்படத்தை கவனித்தால் ரகசிய கேமரா அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டு புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும். இதை வைத்து அறையினுள் ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை அறியலாம்.
இதே போல அறை முழுவதும் இருட்டாக்கி விட்டு அறையை செல்போனில் வீடியோ எடுங்கள். பின்னர் அதை ஓடவிட்டுப் பாருங்கள். எந்த இடத்திலாவது சிவப்பு அல்லது வெள்ளை நிற ஒளி வந்தால் கேமரா இருக்கிறது என்று அர்த்தம்.
செல்போனில் யாரிடமாவது கால் (Call) செய்து பேசிக் கொண்டே அறை முழுவதும் மெதுவாக நடந்து செல்லுங்கள். திடீரென இரைச்சல் சத்தம் அல்லது “க்ளிக்” என்ற சத்தம் கேட்டால் அருகே ரகசிய கேமரா போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் இருக்கிறது என்று உணர்ந்து கொள்ளலாம்.
துணிக்கடையின் உடை மாற்றும் அறைக்குள் நுழைவதற்கு முன்னதாக செல்போனிலிருந்து போன் செய்து பாருங்கள். பின்னர் அந்த அறைக்குள் சென்றவுடன் மீண்டும் கால் செய்து பாருங்கள். பல முறை முயற்சித்தும் கால் போகவில்லை என்றால் கண்டிப்பாக அந்த அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
ஏனெனில் ரகசிய கேமராக்கள் கண்ணாடி இழை கேபிள் (Fiber optic cable) மூலம் தான் இணைக்கப்பட்டிருக்கும். இவற்றின் குறுக்கீடு காரணமாக உங்களுடைய செல்போன் சமிக்கை பரிமாற்றங்கள் தடை செய்யப்படுவதால் தான் கால் செய்ய முடிவதில்லை.
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் இது போன்ற கேமராக்களை கண்டு பிடிக்க பல்வேறு மொபைல் செயலிகள் (Apps) உள்ளன. Hidden Spy camera Detector, Anti Spy camera, RadarBot, iAmNotified, Spy camera detector, DontSpy என பல செயலிகள் உள்ளன.
சில செயலிகள் போலிகள் என்றாலும் சில செயலிகள் நல்ல பயன் தருகின்றன.