Smartphone-ல் மிக வேகமாக சார்ஜ் ஏறனுமா? இதை செய்யுங்க
ஸ்மார்ட்போன் என்பது நம் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது. நமது பல அத்தியாவசிய வேலைகளை ஸ்மார்ட்போன் மூலமே செய்து விடுகிறோம்.
பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை தங்களின் ஸ்மார்ட்போனில் சார்ஜ் மெதுவாக ஏறுகிறது என்பது தான்.
சில ஸ்மார்ட் டிரிக்ஸ் பயன்படுத்தி போனில் சார்ஜ் வேகமாக ஏறுவதை உறுதிப்படுத்த முடியும்.
USB போர்ட் சார்ஜிங்
போன் சார்ஜ் செய்வதற்கு கணினி அல்லது USB போர்ட்டைப் பயன்படுத்தினால், வேகமாக சார்ஜ் ஆகாது. அதாவது கணினியில் USB போர்ட் பயன்படுத்தி உங்கள் போனுக்கு கனெக்ட் செய்து சார்ஜ் செய்தால், வேகமாக சார்ஜ் ஆகாது.
techgeek360
சுவிட்ச் ஆப்
சார்ஜ் செய்யும் போது போனை சுவிட்ச் ஆஃப் செய்து சார்ஜிங் செய்யலாம். இப்படி செய்யும்போது பேட்டரி எந்த செயலையும் செய்யாமலிருப்பதால் விரைவாக சார்ஜ் ஆக உதவும்.
ஏரோபிளேன் மோட்
ஏரோபிளேன் மோடில் ஸ்மார்ட்போனை போட்டால், போன் டேட்டா வேலை செய்யாது, இதனால் போன் சார்ஜ் வேகமாக ஆகும்.
சார்ஜ் ஆகும் போது போன் பயன்படுத்தாதீர்கள்
வேகமாக சார்ஜ் ஆக வேண்டிய சூழலில் போன் சார்ஜிங்கில் இருக்கும்போது பயன்படுத்துவதை தவிர்க்கவும். மற்ற செயலிகள் பயன்பாட்டில் இருக்கும் போது சார்ஜிங் வேகம் குறையும், மேலும் சார்ஜிங் செய்யும் போது போனை பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும்.
91mobiles