ஸ்மார்ட்போன்கள் மனிதர்களில் கலந்துவிடுமா? எதிர்காலம் எப்படி இருக்கும்? ஆய்வாளர்களின் ஆச்சரிய கணிப்பு
மனிதர்களின் எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்கள் எவ்வாறு கலந்திருக்கும் என்பது குறித்த தகவல்கள் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
செல்போன்களின் அசுர வளர்ச்சி
உலக மக்கள் தொகையில் 80 சதவீதம் மக்கள் செல்போன்கள் வைத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நபர் ஒருவர் ஒரு நாளைக்கு 150 முறை செல்போனை பார்ப்பதாக கூறப்படுகிறது.
@GETTY
நாம் நமது அன்றாட வாழ்வில் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஸ்மார்ட்போன்களை உபயோகித்து வருகிறோம். இதன் காரணமாக ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி விஸ்வரூபம் அடைந்துள்ளது.
இணைய உலகமே ஒரு கைக்குள் அடங்கிய இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆய்வாளர்களின் கணிப்பு எனவே, இனி வரும் காலங்களில் ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி அசாதாரணமான அளவில் இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வாளரின் கணிப்பு
அதாவது, தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட்போனை நமது உடலிலேயே இணைத்து பயன்படுத்தும் சூழல் உருவாகலாம் என்று செல்போனை கண்டுபிடித்த மார்ட்டின் கூப்பர் கணித்துள்ளார்.
ஏனெனில், மைக்ரோ சிப் மற்றும் சென்சார் போன்றவை நம் உடலில் பொருத்தப்பட்டு, நாம் சிந்திக்கும் விடயங்கள் திரையில் தோன்றும் சூழல் வரலாம் என்றும் கூறப்படுகிறது.
திரையாக மாறும் ஸ்மார்ட்போன் அதேபோல் தனியாக திரை என்ற ஒன்று இல்லாமல், சுற்றி இருக்கும் சுவர், மேசை போன்றவையே திரையாக மாற்றி பயன்படுத்தப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
Virtual Reality தொழில்நுட்பம் போன்று கண்களில் அணியும் கண்ணாடியில், திரையில் தோன்றும் பிம்பங்கள் தெரியலாம். நம் உடலிலேயே ஆற்றல் உற்பத்தி செய்யப்படுவதால், வெளியில் இருந்து சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறப்படுகிறது.
விளக்கமாக கூற வேண்டும் என்றால், நம் உடலே ஸ்மார்ட்போனுக்கு தேவையான சார்ஜை தயாரித்து கொடுக்கும்.
செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் இனி வரும் காலங்களில் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில் நாம் உறங்குகிறோம் என்றால், நம் ஸ்மார்ட்போன் தானாகவே எதிர்முனையில் இருப்பவர்களுக்கு உறங்குவது குறித்த தகவல் தெரிந்துவிடும்.
@ADOBE STOCK
இவ்வாறாக, பல தொழில்நுட்ப புரட்சிகள் ஏற்படலாம் என ஆய்வாளர்கள் கணிக்கும் நிலையில், ஹாலிவுட் படங்களைப் போல் சமானிய மனிதரின் வாழ்விலும் தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.