Smart phone அடிக்கடி சூடாகிறதா? அதை தடுக்க எளிய வழிகள்

technology smartphone heat
By Raju Oct 04, 2021 07:30 AM GMT
Report

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சினை போன் அடிக்கடி சூடாவது தான். உங்கள் ஸ்மார்ட்போனை தொடர்ந்து ஒரு மணி நேரம் பயன்படுத்தி விட்டு, அதன் டிஸ்ப்ளேவைத் தொட்டாலே கொதிக்கும். சில சமயம், நீண்ட நேரம் சார்ஜ் போட்டுவிட்டு, மொபைலை கையில் எடுத்தாலும் அதிக வெப்பத்தை உணரலாம்.

நமது மொபைல் போனில் நடக்கும் மின்னணு பொருட்களின் செயல்பாடுகள் மூலமே வெப்பமானது உருவாகிறது.

உங்கள் போன் அதிகம் சூடாகிறது என்றால், நீங்கள் கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து காண்போம்.

போன்களில் மல்ட்டிடாஸ்க்கிங்

இசை கேட்டுக்கொண்டே கேம்ஸ் விளையாடுவது, ஒரே நேரத்தில் பல ஆப்ஸ்களை இயக்குவது போன்றவற்றால் போனின் செயல்பாடு அதிகமாக இருக்கும் போது, உங்கள் போன் புராசசர் வேகம் குறையும். போனின் வெப்பம் அதிகரிக்கும். அதுவும் உங்கள் போனில் இருப்பது குறைந்த திறனுள்ள ரேம் என்றால், இந்த பிரச்னையை தவிர்க்கவே முடியாது. எனவே 2 ஜி.பிக்கும் குறைவான ரேம் கொண்ட போன்களில் மல்ட்டிடாஸ்க்கிங்கை குறைப்பது நல்லது.

சார்ஜிங்

உங்கள் போனை எப்போதுமே 100% பேட்டரியுடன் தான் வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. எனவே 80 முதல் 90% அளவுக்கு பேட்டரி அளவு இருந்தாலே ஓகே. சார்ஜ் போடும் போது நாம் செய்யும் இன்னொரு தவறு, பேட்டரி ஃபுல் ஆன பிறகும் கூட, சார்ஜிங்கிலேயே விட்டுவிடுவது. இரவு முழுவதும் போனை சார்ஜ் செய்வதுதான் பலரது பழக்கம். இந்த ஓவர் சார்ஜிங்கும், போன் சூடாக ஒரு காரணம்தான்.

ஸ்மார்ட்போன் கவர்

புது போன் வாங்கியதுமே, ஒரு ஃப்ளிப் கவர் வாங்கி மாட்டுவதுதான் ஊர் வழக்கம். அது போனின் பாதுகாப்பிற்கு நல்லதே! அதே சமயம், போனின் வெப்பம் குறையாமல் இருக்கவும் இவை ஒரு காரணமாக அமைகின்றன. நீண்ட நேரம் கேம் விளையாடும் போதோ, அல்லது இணையம் பயன்படுத்தும் போதோ மொபைல் அதிகம் சூடாகி விடும். அதுபோன்ற சமயங்களில் உங்கள் போன் கவரை கழற்றி விடுதல் நலம்.

வெப்பநிலை

உங்கள் மொபைல் ஏ.சி அறையில் இருக்கும் போது இருந்த வெப்பநிலைக்கும், வெளியே இருக்கும் போது இருக்கும் வெப்பநிலைக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கும். நமது சுற்றுப்புற வெப்பநிலையும் போனின் வெப்பத்திற்கு காரணம். எனவே வெப்பம் அதிகமாக இருக்கும் இடங்கள், இயந்திரங்கள் ஆகியவற்றின் அருகே உங்கள் மொபைல் போன் பயன்பாட்டை தவிர்க்கலாம். நேரடியாக சூரிய ஒளி படும் இடங்களில் உங்கள் மொபைலை வைக்க வேண்டாம்.

ஆப்ஸ்கள்

சில ஆப்ஸ்கள் உங்கள் போனின் ஜி.பி.எஸ், மெமரி, வைஃபை, டிஸ்ப்ளே, ஸ்பீக்கர் உள்ளிட்ட பல விஷயங்களை ஆக்டிவ்வாக வைத்திருக்கும். இதனால் அதிகம் மின்சக்தி வீணாவதோடு, போனின் வெப்பமும் அதிகமாகும். எனவே இதுபோன்ற ஆப்ஸ்களை தவிர்த்து விடுங்கள். ஆன்லைன் கேம்கள் பெரும்பாலும் இந்த ரகங்கள்தான். எனவே ரேம் குறைந்த போன்களில் கேம்களுக்கு தடை போடுங்கள். 



2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US