உங்கள் Smartphone-ல் செயலிகளை யாரும் பார்க்க முடியாதபடி மறைத்து பயன்படுத்துவது எப்படி?
ஸ்மார்ட்போனில் பல்வேறு ஆப்ஸ்கள் கொட்டி கிடக்கிறது. எல்லோராலும், எல்லா நேரமும் எல்லா ஆப்களும் வெளிப்படையாக பயன்படுத்த முடியாது. அது சங்கடத்தைதான் உருவாக்கும்.
அதே நேரம் ஆப்களை மறைத்து வைத்து பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆண்ட்ராய்டு போனின் வெர்ஷனை பொறுத்து அப்ஸ்களை மறைப்பதற்கு வெவ்வேறு வழிமுறைகள் உள்ளன. உதாரணமாக, நீங்கள் ஆண்ட்ராய்டு 6.0 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷனை பயன்படுத்துகிறீர்கள் என்றால் Hide Apps அம்சத்தைப் பயன்படுத்தலாம்.
XFix
ஹோம் ஸ்கிரீன் செட்டிங்ஸ்
நீங்கள் சாம்சங், ஒன்பிளஸ், பிக்சல் என்று எந்த ஆண்ட்ராய்டு பிராண்ட் பயன்படுத்தினாலும், ஆப்ஸ்களை மறைக்க முடியும். இது இல்லை என்றால், ஆப்ஸ்களை மறைப்பதற்கான மாற்று முறை, போன் லாஞ்சர் ஆப்ஸ்-பயன்படுத்தலாம் பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்கள் ஹோம் ஸ்கிரீன் செட்டிங்ஸ் இலிருந்து ஆப்ஸ்களை மறைக்க அனுமதிக்கின்றன.
செட்டிங்ஸ் மெனு ஓபன் செய்து Hide என்று டைப் செய்தால் போதும் எதையெல்லாம் ஹைடு செய்ய வேண்டும் என்பதை தெரிவு செய்து மறைத்து வைத்துக் கொள்ளலாம். மற்றொரு வழி செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று கீழே ஸ்க்ரோல் செய்து ஹோம் ஸ்கிரீன் விருப்பத்தை தேர்வு செய்து பிறகு Hide apps என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் மறைக்க விரும்பும் அம்சங்களை கிளிக் செய்யவும்.
Howtosolveit