உங்கள் Smartphone மெதுவாக வேலை செய்ய இது தான் காரணம்! உடனே இப்படி செய்யுங்கள்
பலரும் செல்போன் மற்றும் லேப்டாப்பை புதிதாக வாங்கி பயன்படுத்தும் போது அது வேகமாக இயங்கும், ஆனால் போகபோக மெதுவாக வேலை செய்யத் தொடங்கும்.
ஸ்டோரேஜ் நிரம்பியதால் தான் இப்படி ஆனது என்று அதை அழித்துக்கொண்டு இருப்போம். அதுவும் ஒரு காரணம் தான் . ஆனால் அதோடு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது தான் குக்கீக்கள்.
அதன்படி உங்களது சர்ச் இன்ஜினின் குக்கீகளையும், ஹிஸ்டரியையும் அவ்வப்போது அழித்துவிட்டால் சாதனம் வேகமாக இயங்குவதை காணமுடியும்.
கூகுள் க்ரோம் (Google Chrome)
கூகுள் க்ரோமை திறந்து திறந்து மேல் வலது மூலையில் உள்ள மூன்று-புள்ளியை கிளிக் செய்யவும். அதில் more tools என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் உலாவல் வரலாறு, பதிவிறக்க வரலாறு, குக்கீகள் மற்றும் பிற தளத் தரவு என்ற அனைத்தையும் அழித்துவிடலாம்.
businessleague
மோசிலா பயர்பாக்ஸ் (Mozilla Firefox)
பயர்பாக்ஸுக்கு, மேல் வலது மூலையில் உள்ள ஹாம்பர்கர் மெனுவைக் கிளிக் செய்யவும். இடது பேனலில் இருந்து தனியுரிமை மற்றும் பாதுகாப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும் . பின்னர் குக்கீகள் மற்றும் தளத் தரவுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
Firefox மூடப்பட்டிருக்கும் போது குக்கீகள் மற்றும் தளத் தரவை நீக்கு என்ற பெட்டியைத் தேர்வுசெய்து, தரவை அழி என்பதைக் கிளிக் செய்யவும்.
pcmag