ஸ்மார்ட் போன் டச் ஸ்கிரீனை இப்படி கூட சுத்தம் செய்யலாம்! ரொம்ப ஈசி
நமது ஸ்மார்போனின் மொத்த அழகும் அதன் டச் ஸ்கீரீன் எனப்படும் திரையில் தான் உள்ளது. பெரிய ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட் போனை வாங்குவதை விட அதை பராமரிப்பது மிக முக்கியம்.
ஸ்மார்ட்போன் டச் ஸ்கிரீனை எளிதாக சுத்தம் செய்வது எப்படி?
ஸ்மார்ட்போனை சுத்தம் செய்ய மைக்ரோஃபைபர் துணியை பயன்படுத்த வேண்டும்.
மொபைலை சுத்தம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன் போனை ஸ்விட்ச் ஆப் செய்து விடுங்கள்.
The Spruce / Julieanne Browning
முதலில் லேசாக ஸ்கிரீனை துடைக்க வேண்டும், இது தூசிகளை சுத்தம் செய்து விடும்.
தேவைப்பட்டால் துடைத்த துணியை காட்டன் சட்டையில் துடைத்து மீண்டும் ஸ்கிரீனை சுத்தம் செய்யுங்கள். மிகவும் அழுத்தமாக துடைக்கவே கூடாது, மீண்டும் லேசாக துடைக்க வேண்டும்.
ஸ்கிரீனை சுத்தம் செய்த பின் மைக்ரோஃபைபர் துணியை வெது வெதுப்பான நீரில் முக்கி கழுவ வேண்டும், இதையும் மெதுவாக செய்ய வேண்டும் நிறைய அழுத்த கூடாது.
குறிப்பு: சுத்தம் செய்ய பேப்பர் டவலையும் பயன்படுத்தலாம்.
பேப்பர் டவலில் ஆல்காஹாலிக் ஜெல் போட்டு அதை பேப்பர் முழுவதும் பரவும் படி செய்ய வேண்டும்.
ஜெல் தடவிய பேப்பர் டவலை கொண்டு ஸ்கிரீனை துடைக்க வேண்டும்.
Derek Poore/CNET