Smart phone வாங்குவதற்கு முன்னர் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்! இப்படி இருந்தா அந்த போனை வாங்காதீங்க
ஸ்மார்ட்போன் என்பது நமது வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது என் கூறினால் அது மிகையாகாது! ஏனென்றால் நமது தேவைகளை இலகுவாக செய்து முடிப்பதற்கும் நேரத்தை மிகுதிபடுத்தவும் உதவுகிறது.
தினமும் வகை வகையான பல்வேறுபட்ட அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளிவருகின்றன.
அந்தவகையில் நாம் ஒரு புது ஸ்மார்ட்போனை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விடயங்கள் எவை என பார்ப்போம்.
விலை
ஒரு புதிய கையடக்க தொலைபேசியை கொள்வனவு செய்ய நினைக்கையில் முதலில் தீர்மானிக்க வேண்டியது விலை தான். அனைத்து கையடக்க தொலைபேசிகளும் அதன் விலைக்கேற்றவகையில் அவை கொண்டிருக்கும் வசதிகள் நிர்ணயிக்கப்படுகிறது. ஆகவே ஸ்மார்ட்போன் கொள்வனவு செய்ய முன் முதலில் விலையை தான் முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் முடிவு செய்த பெறுமதிக்குறிய சிறந்த போனை வாங்கலாம்.
பிராண்ட்
தற்போது சந்தையில் ஆப்பிள் (Apple), சாம்சங் (Samsung), நோகியா (Nokia), ஹுவாவி (Huawei) மற்றும் மேலும் பல பிரசித்திபெற்ற நம்பகரமான பிராண்டுகள் கிடைக்கின்றன.
அவற்றில் நமக்கு பிடித்தமான, பயன்படுத்துவதற்கு இலகுவான பிராண்டை தெரிவு செய்ய வேண்டும். ஏனென்றால் சிலவேளை ஒரே விலையாக இருந்தாலும் வெவ்வேறு பிராண்டுகளில் வேறுபட்ட வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
இயக்கமுறைமை
ஸ்மார்ட்போனை பொருத்தவரையில் இயக்கமுறைமை என்பது மிகவும் முக்கியமானதொன்றாகும். ஏனென்றால் ஒவ்வொரு இயக்கமுறைமைக்கும் அதன் அம்சங்கள் வித்தியாசப்படும். பொதுவாக ஆண்ட்ரொய்ட் (Android) மற்றும் ஐஓஸ் (iOS) ஆகிய இயக்கமுறைமைகள் தான் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை தவிர மேலும் பல இயக்கமுறைமைகள் உலகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றில் ஆண்ட்ரொய்டின் பாவணை மிக அதிகம் என குறிப்பிட முடியும். இது மிகவும் இலகுவாக பயன்படுத்தக்கூடிய இயக்கமுறைமையாகும். தனது ஸ்மார்ட்போனை பயனர் அவருக்கு பிடித்த மாதிரி தனிப்பயனாக்க (Customize) முடியும். அத்துடன் வேறுபட்ட திரை அளவு (Screen Size) மற்றும் வடிவங்களில் (Design) சந்தைக்கு வருவதால் அனைவருக்கும் கொள்வனவு செய்யக்கூடிய விலைகளில் கிடைக்கின்றன. மேலும் ஆண்ட்ரொய்டில் அதிகளவான ஆப்கள் (Apps) பயன்படுத்த முடியும். ஆப்பிள் iOS ஐ பொறுத்தவரையில் தனிப்பயனாக்க முடியாது.
செயலி
ஸ்மார்ட்போனின் இயக்கத்தில் செயலி மிக முக்கியமான ஒரு பங்கு வகிக்கிறது. நீங்கள் கொள்வனவு செய்ய இருக்கும் ஸ்மார்ட்போனின் பயன்பாட்டின் அடிப்படையில் உங்களுக்கு சரியான செயலியை கொண்ட ஸ்மார்ட்போனை தெரிவு செய்யலாம்.
நீங்கள் உங்களது ஸ்மார்ட்போனில் சாதாரணமான பணிகளை மட்டும் செய்ய விரும்பினால் அதாவது அழைப்புகளை மேற்கொள்ளல் (Calls), குறுந்தகவல்கள் (SMS) பறிமாற்றம், சில ஆப்களை பயன்படுத்தல் போன்றவாறான பணிகளை செய்ய விரும்பினால் சாதாரண செயலியை கொண்ட ஸ்மார்ட்போன் போதுமானது.
சேமிப்பகம்
ஸ்மார்ட்போனில் ஆப்கள், புகைப்படங்கள் (Images), கானொளிகள் (Videos), ஆவணங்கள் (Documents) போன்ற அனைத்தையும் சேமித்து வைக்க சேமிப்பகம் உதவுகிறது. தற்போது நாம் அனைத்துவிதமான கோப்புகளையும் ஸ்மார்ட்போனிலேயே சேமித்துவைத்துள்ளோம். காரணம் நமது அவசர வாழ்க்கையில் அனைத்து பணிகளையும் எளிதில் செய்து முடிப்பதற்காகும்.
அத்துடன் பொழுதுபோக்கு அம்சங்களான பாடல்கள், திரைப்படங்கள் போன்றவற்றையும் சேமித்துவைத்திருப்போம். மேலும் புகைப்படங்கள் எடுக்கையில், கானொளிகள் பதிவு செய்கையில் அதிக இடவசதி தேவைப்படும்.
ஆகவே சேமிப்பகம் அதிகமாக இருக்கும் மொபைல் போனை வாங்குவது நல்லது. குறைந்தது 32GB சேமிப்பகம் கொண்ட போனை வாங்குவது பயன் தரும்.
ரேம் (Ram)
ரெம் என்பது ஸ்மார்ட்போன் எப்போதும் வேகமாக செயற்படவும் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்யவும் பயன்படும் நினைவகம் ஆகும். ரெம்மின் அளவு அதிகமாக இருக்கையில் போன் எப்போதும் ஒரே வேகத்தில் தாமதமாகாமல் செயற்படும்.
அத்துடன் பல ஆப்களை ஒரே நேரத்தில் திறந்து பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். அத்துடன் ஆப்கள் நாட்கள் செல்ல செல்ல புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். அவற்றின் புதிய பதிப்பை (Version) நிறுவுகையில் (Install) அதை திறந்து பயன்படுத்த அதிக ரெம்மினை எடுத்துக்கொள்ளும். ஆகவே ரெம் அதிகமாக இருக்கையில் மாத்திரமே போன் எப்போதும் வேகமாக செயற்படும். இக்காலத்தில் 4GB க்கு மேல் இருக்கும் போன்களை பயன்படுத்துவது நல்லது, அதற்கு கீழே இருந்தால் வாங்க வேண்டாம்.