உங்கள் Smartphone சேதமடையாமல் அப்படியே புதுசா இருக்கனுமா? இப்படி செய்யுங்கள் போதும்
ஸ்மார்ட்போனை சேதமடையாமல் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம்.
உங்கள் ஃபோனை சேதமடையாமல் பாதுகாக்க உதவும் சில டிப்ஸ்களை காண்போம்.
சேதத்தில் இருந்து மொபைல் ஸ்கிரீனை பாதுகாக்க நல்ல தரமான 'ஸ்கிரீன் கார்டு' அல்லது 'டெம்பர்டு கிளாஸ்' கண்டிப்பாக பயன்படுத்துவது அவசியம்.
ஃபோன் கவர் இல்லாமல் மொபைலை பயன்படுத்துவது ஒரு நல்லஅனுபவமாக தான் இருக்கும். ஆனால் ஃபோன் கவர்கள் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன அதுவே உங்கள் ஃபோனுக்கு ஃபோன் கவர் போடுவது முக்கியமாகும்.
techspot
ஸ்மார்ட் ஃபோனை வைக்கும் பாக்கெட்டில் வேறு பொருட்கள் ஏதும் இல்லாமல் காலியாக இருப்பதை உறுதி செய்யவும், ஏனெனில் நாணயங்கள் அல்லது பிற கடினமான பொருட்கள் போன்றவற்றுடன் செல்போனை சேர்த்து வைத்தால் ஸ்க்ராச்சஸ் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.
உங்களது கவனம் மொபைலின் மீது இருந்து கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் அதை பாதுகாப்பான இடத்தில் வைத்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும். குழந்தைகள் அல்லது செல்லப்பிராணிகள் எளிதில் அணுகக்கூடிய இடங்களில் வைக்க வேண்டாம்.