Smartphone உற்பத்தியைக் குறைக்கும் சாம்சங் நிறுவனம்! கசிந்த காரணம்
ஸ்மார்ட்போன் உற்பத்தித் திட்டங்களை சாம்சங் நிறுவனம் குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்.
260 மில்லியன் யூனிட்களை மட்டுமே உற்பத்தி செய்ய திட்டம்
சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் உற்பத்தித் திட்டங்களைக் குறைக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் சர்வதேச அளவில் சாம்சங் நிறுவனம் முன்னணியில் உள்ளது. சமீப காலமாக சாம்சங் ஸ்மார்ட்போன்களின் விற்பனை சரிந்து வருவதால் உற்பத்தியைக் குறைக்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.
நடப்பு ஆண்டுக்கான டிமாண்ட் பெரிதாக இல்லாததால் தனது ஸ்மார்ட்போன் உற்பத்தியைக் குறைத்துக்கொள்ள சாம்சங் நிறுவனம் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2022ம் ஆண்டுக்கான தேவை குறைந்துள்ளதால், கடந்த ஆண்டை விடக் குறைவான அளவிலான ஸ்மார்ட்போன்களை மட்டுமே உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
DH Photo/KVN Rohit
தி எலெக்கின் அறிக்கையில், சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு 334 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளதாகவும், அவற்றில் 300 மில்லியன் யூனிட்களை வெவ்வேறு சந்தைகளுக்கு அனுப்பும் திட்டம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது இந்நிறுவனம் தனது உற்பத்தி திட்டத்தில் மாற்றங்களைச் செய்துள்ளது. சாம்சங் ஸ்மார்ட்போன்கள் மீதான வாடிக்கையாளர்களின் தேவை குறைந்துள்ளதைக் கணக்கில் கொண்டு, 260 மில்லியன் யூனிட்களை மட்டுமே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
2021ம் ஆண்டு 300 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்தது குறிப்பிடத்தக்கது.
Samsung