உங்கள் Smartphone ‘ஹேங்க்’ ஆகி டென்ஷன் கொடுக்குதா? அதை தடுக்க எளிய வழி
ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் போன் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்த போன்கள் இப்போது பொழுதுபோக்கு சாதனமாகவும் மாறிவிட்டது.
இதுதவிர, அலுவலகம் சென்று செய்ய வேண்டிய வேலைகளை உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தே செய்துவிட முடியும். இவ்வளவு சிறப்பம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போனுக்கு, சில பிரச்சனைகளும் இருக்கின்றன.
அதில் ஒன்று ஹேங்கிங் (Hanging) அதிக பயன்பாடு, வைரஸ் உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக இத்தகைய பிரச்சனைகளை ஸ்மார்ட்போன்கள் எதிர்கொள்ளும்.
உங்கள் ஸ்மார்ட்போன் ஹேங்கிங் ஆவதை தடுப்பது எப்படி?
தேவையில்லாத பைல்கள்
ஒரே பைல்கள் இரண்டு முறை போனில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அந்த பைல்களால் மட்டுமே ஸ்டோரேஜ் பற்றாக்குறை ஏற்படும். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவிறக்கம் செய்யும்போது, இரண்டு பைல்கள் சேமித்திருக்க வாய்ப்புகள் உண்டு. அதனால், அந்த பைல்களை அடையாளம் கண்டு நீக்குங்கள்.
இணையம்
இண்டர்நெட் பயன்படுத்தும்போது, பிரவுசிங் பைல்கள் போனில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஸ்மார்ட்போனில் இருக்கும் கிளீனர் செயலிகளை பயன்படுத்தினால், இந்த டெம்பரவரி பைல்களை எளிதாக நீக்க முடியும்.
அதிக ஸ்டோரேஜ்
ஸ்மார்ட்போன்கள் ஹேங்க் பிரச்சனையை எதிர்கொள்வதற்கு மிக முக்கிய காரணம், அதன் ஸ்டோரேஜ் முழுமையாக நிரம்பியிருப்பது. தேவையற்ற பைல்கள் உள்ளிட்டவைகளை சேமித்து வைக்கும்போது ஏற்படும் இடப்பற்றாக்குறையால் போன் புதிய செயல்பாடுகளுக்கு ஒத்துழைக்காது. அதனால், போனில் எப்போதும் குறிப்பிட்ட ஸ்டோரேஜ் காலியாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.
பேட்டரி ரீசெட்
2 மாதத்திற்கு ஒரு முறை மொபைலை பேட்டரி ரீசெட் செய்யுங்கள். அப்படி செய்வதற்கு முன்பு அனைத்து தகவல்களையும் பேக் அப் எடுத்து வைத்து கொள்வது முக்கியம். ஒருமுறைக்கு 2 முறை பேக் அப் எடுக்கப்பட்டுள்ளதா என சோதித்து பார்த்து விட்டு ரீசெட் செய்திட வேண்டும். 3 நாளைக்கு ஒருமுறை அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்து போடுங்கள், இப்படி செய்வதும் ஹேங்கிங் பிரச்சனையை சரி செய்யும்.
மெமரி கார்டு
சில மொபைல்களில் மெமரி கார்டில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் இருந்தாலும் ‘ஹேங்’ ஆக வாய்ப்புண்டு. செல்போனில் வைரஸ் இருந்தாலும் ‘ஹேங்’ ஆக வாய்ப்புகள் அதிகம். இதற்கு காரணம் செல்போனில் உள்ள ஆண்டிவைரஸ் ஆப்ஸ்கள் சரியாக ஸ்கேன் செய்வதில்லை என்பதே ஆகும். எனவே இதற்கு மாறாக ஆண்டிவைரஸ் மென்பொருளை கணினியில் நிறுவி மாதம் ஒருமுறை ஸ்கேன் செய்து பயன்படுத்தலாம்.