உங்கள் செல்போனில் சிக்னல் கோளாறு இருக்கா? சிக்னலை பூஸ்ட் செய்வது எப்படி?
ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனை அதில் ஏற்படும் சிக்னல் கோளாறு தான்..! சிக்னல் அளவை பூஸ்ட் செய்ய எளிய வழிகள் என்ன?
டவர்
செல்போன் டவர் பிரச்சினையை ஓரளவு அகற்ற ஜன்னல் அல்லது சற்றே அதிக பரப்பளவு கொண்ட இடத்திற்கு செல்லலாம். இரும்பு அல்லது சிமென்ட் சுவர் அருகே நிற்காமல் விலக வேண்டும்.
payetteforward
சிம் கார்டு
சிம் கார்டு டிரேயில் இருக்கும் தூசு அல்லது இதர சேதங்கள் கூட செல்போன் சிக்னல் குறைவதற்கு காரணமாக இருக்கலாம். நாம் பயன்படுத்தும் சிம் கார்டு தரத்தை பொருத்தே நமக்கு கிடைக்கும் சிக்னல் தரம் அமையும். இதனால் மொபைலின் சிம் கார்டினை கழற்றி சுத்தம் செய்து மீண்டும் மொபைலில் போடலாம். இவ்வாறு செய்யும் போது சிக்னல் தரம் சீராகலாம்.
பேட்டரி
பொதுவாக நம் மொபைலுக்கு தேவையான சிக்னலை தேடுவதிலேயே பேட்டரியின் சார்ஜ் குறைய ஆரம்பிக்கும். இதனால் பேட்டரி அளவு குறையும் போது சிக்னலை தேடுவது சிரமமான காரியமே. இதுபோன்ற சூழல்களில் தேவையில்லாத ஆப்ஸ்களை டிஸ் ஏபிள் செய்யலாம்.
ஆன்டெனா
ஸ்மார்ட்போனினை பாதுகாக்க நீங்கள் பயன்படுத்தும் கவர் / கேஸ் சில சமயங்களில் மொபைல் போன் சிக்னலை பாதிக்கலாம். இதுபோன்ற நிலை பெரும்பாலும் தடிமனான மற்றும் ரக்கட் வகை மொபைல் கேஸ்களில் அதிகம் ஏற்படும். இதனால் மொபைல் போனின் ஆன்டெனாவை மொபைல் கேஸ் மறைக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
crast.net