Smartphoneல் மறைக்கப்பட்ட 5 ரகசிய அம்சங்கள்! இவ்ளோ விஷயம் ஒளிஞ்சிருக்கா?
Smartphone-ஐ பலரும் பயன்படுத்துகிறோம், ஆனால் அதில் இருக்கும் பல அம்சங்கள் நமக்கு முழுமையாக தெரிவதில்லை.
அந்த வகையில் ஸ்மார்ட்போனில் மறைக்கப்பட்ட சில ரகசிய அம்சங்கள் பற்றி காண்போம்.
உங்களை அழைக்கும் நபரின் பெயரை நீங்கள் கேட்கலாம்
மொபைல் பாக்கெட்டில் அல்லது பையின் அடியில் இருக்கும் போது, திடீரென வரும் அழைப்புகளால் நீங்கள் வெறுப்பு அடைகிறீர்களா? கவலை வேண்டாம், வரும் அழைப்புகளை இயர்பீஸ்கள் தானாகவே எடுக்க ஐபோனில் உள்ள அனௌன்ஸ் கால்ஸ் (Announce Calls) பயன்முறையை செயல்படுத்தினால் போதும். இதை செயல்படுத்தினால் உங்களை அழைக்கும் நபரின் பெயரை நீங்கள் கேட்கலாம்.
ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் சென்ட் ஆனதையும், ரிஸீவ் ஆனதையும் பார்க்க
எப்படி என்று பார்ப்போம் வாங்க, இது மற்றொரு ஆச்சரியமான ஐபோன் அம்சம் ஆகும்.
ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் சென்ட் ஆனதையும், ரிஸீவ் ஆனதையும் பார்க்க திரையில் இடதுபுறமாக ஸ்வைப் செய்து, குறிப்பிட்ட மெசேஜை லாங் பிரஸ் செய்யவும்.
பிறர் உங்களின் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது உதவும் கைடட் அக்சஸ்
கைடட் அக்சஸ் அம்சம் ஆனது வேறு யாராவது உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது நீங்கள் உங்கள் தனிப்பட்ட விஷயங்களை மறைக்க அனுமதிக்கும் ஒரு செயல்பாடு ஆகும்.
இதை செயல்படுத்த ஜெனெரல் செக்ஷன் சென்று பின் அக்சஸ்பிலிட்டியை அணுகவும்.
ஆட்டோ அப்டேட்களை டிசேபிள் செய்வது எப்படி?
உங்கள் ஸ்மார்ட்போனில் எந்த விதமான குழப்பமும் அல்லது சேமிப்பு பற்றாக்குறையும் வர கூடாது என்று நீங்கள் விரும்பினால் கூகுள் பிளேவின் ஆட்டோ அப்டேட்டை டிசேபிள் செய்து வைப்பது நல்லது.
குறிப்பாக இந்த அம்சம் பழைய அல்லது பலவீனமான தொலைபேசிகளைக் கொண்டவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நிறுவப்பட்ட பயன்பாடுகளின் லைப்ரரி
ஒரு புதிய தொலைபேசியை வாங்கி உள்ளீர்களா? மீண்டும் அனைத்து ஆப்ஸ்களை தேட வேண்டுமா? அது ஒரு பிரச்சனை இல்லை.
உங்கள் பயன்பாடுகள் அனைத்தும் லைப்ரரியில் சேமிக்கப்படும். அங்கு சென்று, நீங்கள் நிறுவ விரும்பும் பயன்பாடுகளை தேர்ந்தெடுத்து, பதிவிறக்குங்கள். அவ்வளவு தான்!.