பயன்பாட்டில் இல்லாத பழைய Smartphone-ஐ சிசிடிவி கேமராவாக மாற்றி வீட்டை பாதுகாக்கலாம்! எப்படி தெரியுமா?
பொதுவாக பயன்படுத்தப்படாத பழைய ஸ்மார்ட்போன்கள் வீட்டு டிராயரில் கிடக்கும். ஆனால் அதை பாதுகாப்பு சிசிடிவி கேமராவாக மாற்றலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
உங்களது மொபைல் போனில் செக்யூரிட்டி கேமரா செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். பெரும்பாலான செயலிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பயன்பாடுகளையே வழங்கும்.
செயலியை செட்டப் செய்ததும் உங்களது வீடு அல்லது மற்ற இடங்களை ஸ்மார்ட்போன் கொண்டு எங்கிருந்தும் கண்காணிக்க முடியும்.
ஸ்மார்ட்போன்களில் செட்டப் செய்து முடித்ததும், கேமராவை பொருத்த வேண்டும். வீட்டின் நுழைவு வாயில், பின்புறம் மற்றும் உங்களது விலை உயர்ந்த பொருட்கள் இருக்கும் அறைகளில் கேமராவை பொருத்தலாம்.
கேமராவை பொருத்துவதற்கு சிறிய ஸ்மார்ட்போன் டிரைபாட் அல்லது சக்ஷன் கப் கார் மவுன்ட் போன்றவை சிறப்பாக வேலை செய்யும்.
வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய அதிக மின்சாரம் தேவைப்படும் என்பதால், ஸ்மார்ட்போன்களுக்கு எந்நேரமும் சார்ஜ் செய்யும் வசதி ஏதுவான இடத்திலோ அல்லது கேமராவை பொருத்தும் இடத்தில் சார்ஜிங் செய்ய வசதியை முன்கூட்டியே தயார் செய்வது நல்லது.