உங்கள் ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் மறந்தும் இப்படி செய்ய வேணாம்! அப்பறம் அவ்ளோ தான்
பல்வேறு மக்கள் தண்ணீரில் விழுந்த ஸ்மார்ட்போனை சரிசெய்ய தேவையில்லாத வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்.
சில வழிமுறைகள் மூலம் எளிமையாக சரிசெய்ய முடியும்
நமக்கு தெரியாமலே திடீரென நமது ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் பதட்டப்படாமல் உடனே ஸ்மார்ட்போனை தண்ணீரிலிருந்து எடுக்க வேண்டும்.
அடுத்து தண்ணீரிலிருந்து எடுத்த ஸ்மார்ட்போனை ஆன் செய்யாமல், முதலில் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். அதற்கு மேல் உங்கள் ஸ்மார்ட்போன் சுவிட்ச் ஆப்-ஆகவில்லை என்றால் பவர் பட்டனை அழுத்திப் பிடித்தால் போதும் உடனே சுவிட்ச் ஆப்-ஆகிவிடும்.
அதன்பின்பு குறிப்பிட்ட நேரம் வரை உங்கள் ஸ்மார்ட்போன் ஆன் செய்யாமல் இருப்பது நல்லது.
ஸ்மார்ட்போன் சுவிட்ச் ஆப் நிலையில் இருக்கும் போது சார்ஜ் செய்தல் கூடாது, ஒருவேலை நீங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்தால் வெடிக்கும் நிலைக்கு தள்ளப்படும்.
சிலர் ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை எடுக்க மைக்ரோவேவ் ஓவன் சாதனம், அல்லது நெருப்பு போன்றவற்றை பயன்படுத்துவார்கள், அவ்வாறு செய்யக்கூடாது இதுவும் வெடிக்கும் நிலைக்கு தள்ளப்படும்.
சிலர் ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை எடுக்க மைக்ரோவேவ் ஓவன் சாதனம், அல்லது நெருப்பு போன்றவற்றை பயன்படுத்துவார்கள், அவ்வாறு செய்யக்கூடாது இதுவும் வெடிக்கும் நிலைக்கு தள்ளப்படும்.
உங்கள் ஸ்மார்ட்போனை ஆன் செய்ய முடியாத நிலைமையில் சர்வீஸ் சென்ட்டர் எடுத்து செல்வதே இறுதிவழி.