கம்பீரமாக இறுதிப்போட்டிக்கு சென்ற ஸ்மித்தின் படை! இறுதிப்போட்டியில் பெர்த்துடன் பலப்பரீட்சை
பிக் பாஷ் லீக் சேலஞ்சர் போட்டியில் ஸ்மித்தின் சிட்னி சிக்ஸர்ஸ் அணி ஹோபர்ட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
198 ஓட்டங்கள்
சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிகளுக்கு இடையிலான பிக் பாஷ் லீக் சேலஞ்சர் போட்டி சிட்னியில் நடந்தது.
1️⃣9️⃣9️⃣ is the target for the defending champs!
— KFC Big Bash League (@BBL) January 23, 2026
Who makes the #BBL15 Final from here? 🏆 pic.twitter.com/OR6paxlPHb
முதலில் ஆடிய சிட்னி அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ஓட்டங்கள் குவித்தது. ஸ்டீவன் ஸ்மித் (Steven Smith) 65 ஓட்டங்களும், ஜோயல் டேவிஸ் (Joel Davies) 27 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய ஹோபர்ட் அணி 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், வெப்ஸ்டர் மற்றும் மெக்டெர்மோட் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
பியூ வெப்ஸ்டர் 24 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, விக்கெட்டுகள் தொடர்ச்சியாக சரிய தொடங்கியது. அதிரடி காட்டிய மெக்டெர்மோட்டினை 40 (26) ஓட்டங்களில் ஸ்டார்க் வெளியேற்றினார்.
ஆல்அவுட்
அதனைத் தொடர்ந்து ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணி 17.2 ஓவர்களில் 141 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
பென் ட்வர்ஷுய்ஸ் 3 விக்கெட்டுகளும், ஸ்டார்க், அப்போட் மற்றும் டேவிஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 27 ஓட்டங்களுடன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஜோயல் டேவிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
Rishad Hossain's #BBL15 campaign ends with a huge 92-metre six at the SCG 🤯 pic.twitter.com/McGoReiucT
— KFC Big Bash League (@BBL) January 23, 2026
சிட்னி சிக்ஸர்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 25ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸை ஸ்மித்தின் படை எதிர்கொள்கிறது.
Oh my goodness!
— KFC Big Bash League (@BBL) January 23, 2026
That is a SUPERB caught & bowled dismissal from Joel Davies 🫨 #BBL15 pic.twitter.com/qD3qhZ0PeI
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |